உபுண்டுவில் grub 2 install செய்வது பற்றி முன்னர் பார்த்தோம். இப்போது splash image நிறுவுவது பற்றி பார்ப்போம்.
முதலில் கீழ்கண்ட கட்டளையின் மூலம் டெர்மினலில் நிறுவிக்கொள்ளவேண்டும்.
sudo aptitude install grub2-splashimages
பின்னர் file browser சென்று பார்த்தால் /usr/share/grub/ folderல் சிறு படங்களாக தெரியும்.

/etc/grub.d/05_debian_theme... என்ற கோப்பினை திறந்து கொள்ளவேண்டும்.
sudo gedit /etc/grub.d/05_debian_theme
அதில் உள்ள கீழ்கண்ட வரியை
[...]
for i in {/boot/grub,/usr/share/images/desktop-base}/moreblue-orbit-grub.{png,tga} ; do
[....]
கீழ்கண்டவாறு மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.
[...]
for i in {/boot/grub,/usr/share/images/desktop-base,/usr/share/images/grub}/Moraine_Lake_17092005.{png,tga} ; do
[...]
இதில் Moraine_Lake_17092005 என்பது படங்களின் பெயர்களாகும்.
பின்னர்
sudo update-grub
sudo reboot செய்தால் splash image தோன்றும்.
அருமை.நன்றி
ReplyDelete