System->Administration->Synaptic Package Manager சென்று அதன் search boxல் espeak என்று தட்டச்சு செய்து நிரலை தெர்வு செய்து பின் Apply பொத்தனை அழுத்தினால் நிரல் நிறுவப்பட்டுவிடும்.

பின்னர் டெர்மினலில்
#espeak "this is test" என்று தட்டச்சு செய்தால் நமக்கு தெளிவாக கேட்கும்.
#espeak என்று தட்டச்சு செய்தால் நாம் என்ன தட்டச்சு செய்கின்றோமோ அது கேட்க ஆரம்பிக்கும். மறக்கமால் ஒரு வார்த்தையை தட்டச்சு செய்து முடித்தவுடன் என்டர் கீ அழுத்தவேண்டும்.
#espeak --voices என்று தட்டச்சு செய்தால் எந்தெந்த மொழிகளில் நாம் கேட்கலாம் என்பது தெரியும்.

#espeak -vta "தமிழ் வாழ்க" என்று தட்டச்சு செய்தால் englishகாரன் குரல் கேட்கும்.
பல்வேறு குரல்களை கேட்க /etc/speech-dispatcher/speech.conf என்ற கோப்பில்
# currently supported: MALE1, MALE2, MALE3, FEMALE1, FEMALE2, FEMALE3,
# CHILD_MALE, CHILD_FEMALE
DefaultVoiceType "MALE1" என்ற இடத்தில் நமக்கு வேண்டிய குரலை தேர்வு செய்துகொள்ளலாம்.
பின்னர் ஒரு டெக்ஸ்ட் கோப்பில் இருக்கும் எழுத்துக்களை தட்டச்சு செய்து கொண்டு அவற்றை wav கோப்புக்களாக மாற்றிகோள்ளலாம்.
#espeak -f xxx.txt -w xxx.wav -vta என்று தட்டச்சு செய்தால் கோப்பு மாறி விடும்.mp3 கோப்புகளாக கூட மாற்றிகோள்ளலாம்
#espeak -v xxx.txt --stdout | lame - xxx.mp3 -vta ஆங்கிலத்தில் மட்டும் இது வேலை செய்கிறது.
தேதி நேரம் தெரிந்து கொள்ள டெர்மினலில்
#date "+The time sponsered by ram is %H hours %M minutes and %S seconds" | espeak என்று தட்டச்சு செய்தால் குரல் கேட்கும்.
pdf கோப்புகளை கூட கேட்க முடியும். அதற்கு pdf கோப்புகளை text கோப்புகளாக மாற்றிகோள்ள வேண்டும்.
#pdftotext xxx.pdf xxx.txt என்று தட்டச்சு செய்தால் கோப்பு மாறிவிடும். பின்னர் wav ஆகவோ அல்லது mp3 கோப்புகளாகவோ மாற்றி கோள்ளலாம்.
very very useful post thanks
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி
ReplyDeleteதமிழ் பேசும் உபுண்டு என்று தலைப்பு வைத்திருந்தால் சரியாக இருக்கும்.
ReplyDelete