Pages

Saturday, January 23, 2010

உபுண்டுவில் எழுத்துருக்களை நிறுவுவதற்கு

உபுண்டுவில் எழுத்துருக்களை நிறுவுவதற்கான வழிமுறைகள்

விண்டோவினுடைய எழுத்துருக்களை நிறுவுவதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.

விண்டோவில் எழுத்துரு கோப்புகள் விண்டோவில் fonts என்ற அடைவினுள் இருக்கும். உபுண்டுவில் இருந்தபடியே அந்த அடைவை அணுகி உபுண்டு desktop காப்பி செய்யவேண்டும். அதாவது அடைவின் பெயர் wfonts என்பதாக இருக்கட்டும். உதாரணத்திற்க்காக அவரவர்கள் விருப்பபடி பெயர் வைத்துக் கொள்ளலாம்.

தினமலர், தினதந்தி,தினமணி போன்ற நாளிதழ்களை படிப்பதற்க்கு அந்தெந்த நாளிதழ்களின் வலைத்தளத்திலே எழுத்துரு தரவிறக்க சொல்லி இருப்பார்கள் அதையும் தரவிரக்கி இந்த எழுத்து அனைத்தையும் ஏதேனும் ஒரு அடைவினுள் அதாவது tfonts என்பதாக desktopல் இருக்கட்டும்.

இப்போது இரண்டு அடைவு இருக்கும். பின்னர் டெர்மினலில்

arulmozhi@arulmozhi-desktop:~$ cd Desktop
arulmozhi@arulmozhi-desktop:~/Desktop$

பின்னர்

sudo mv wfonts /usr/share/fonts/truetype/ என்று தட்டச்சு செய்தால் கடவுச் சொல் கேட்கும். அதை அளித்தால் wfonts என்ற அடைவானது /use/share/fonts/truetype/ என்ற உபுண்டுவினுடைய அடைவிற்குள் சென்றுவிடும். இதே போல் tfonts என்ற அடைவையும் செய்யவேண்டும்.

மீண்டும் டெர்மினலுக்கு வந்து

#sudo fc-cache -f -v /usr/share/fonts/truetype/ என்று தட்டச்சு செய்தால் போதும். எழுத்துருக்கள் நிறுவப்பட்டுவிடும். open office போன்றவற்றிலும் வந்துவிடும். ஏதேனும் ஒரு தமிழ் எழுத்துருவை நிறுவ வேண்டியிருந்தாலும் இதே முறையை பின்பற்றலாம். ஒரு எழுத்துரு இருந்தால் அடைவு தேவையில்லை. அப்படியே mv கட்டளை கொடுத்து சேர்த்துக்கொள்ளலாம். இதற்கான கட்டளை

#sudo mv xxx.ttf /usr/share/fonts/truetype/tfonts/ என்று கட்டளை கொடுத்தால் எழுத்துரு அடைவினுள் சென்றுவிடும். இதன் பின் fc-cache கட்டளை கொடுக்கவேண்டும்.


2 comments:

  1. Good info.
    Is any software to write 3d tamil fonts in Ubuntu?
    Gimp doesn't support tamil fonts.

    ReplyDelete
  2. வாருங்கள் வடுவூர் குமார் அவர்களே உங்கள் வருகைக்கு நன்றி. open officeல் 3டி எழுத்துக்கள் வரவழைக்கலாம். open officeலே இருக்கிறது. gimpல் கூட தமிழ் எழுத்துரு வருகிறது. ms office உள்ளதைவிட அழகாகவே 3d எழுத்து வருகிறது.

    ReplyDelete