Pages

Friday, January 29, 2010

உபுண்டு desktopல் my computer,trash,home folder, network iconகளை வரவழைக்க

உபுண்டு desktopல் mycomputer, trash, network servers, home folder icon வரவழைக்க கீழ்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தலாம்.

விண்டோஸ் os ல் defaultஆக my computer, internet explorer, recycle icon ஆகியவைகள் os நிறுவியவுடன் வந்துவிடும்.

ஆனால் உபுண்டுவில் default ஆக இந்த icon கள் இருப்பதில்லை.


alt+f2 வை அழுத்த கீழ்கண்ட விண்டோ விரியும்.



இதில் மேலே கண்டவாறு 'gconf-editor' என்று தட்டச்சு செய்து run பொத்தானை அழுத்தவேண்டும்.


மேலே கண்ட விண்டோவில் app->nautilus->desktop என்று தேர்ந்தெடுக்க வேண்டும்.


மேலே இடது பக்க விண்டோவில் இருக்கும் டிக் செய்யப்படாத கட்டங்கள் நான்கு இருக்கும் அவைகளை டிக் செய்துவிட வேண்டும். அதாவது

computer_icon_visible
home_icon_visible
network_icon_visible
trash_icon_visible

ஆகிய நான்கு கட்டங்களிலும் டிக் செய்யவேண்டும்.

இப்போது dekstop கீழ்கண்டவாறு காட்சி அளிக்கும்.


icon தேவையில்லை என்று கருதினால் மேற்கண்ட முறையில் நான்கு கட்டங்கலில் இருந்து டிக்கை எடுத்துவிடவேண்டும்.

1 comment: