உபுண்டுவில் mplayer ஐ பயன்படுத்தி dvdயிலிருந்து அதாவது vob கோப்புகளிலிருந்து ஆடியோவை மட்டும் தனியாக பிரிக்கலாம்.
ஒரு அடைவினுள் vob கோப்புகளை செமித்து கொள்ளவேண்டும்.
பின்னர் இதே அடைவினுள் சென்று கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்யவேண்டும்.
arulmozhi@arulmozhi-desktop:~$ cd Desktop
arulmozhi@arulmozhi-desktop:~/Desktop$ cd vob
arulmozhi@arulmozhi-desktop:~/Desktop/vob$
பின்னர் டெர்மினலில்
cat VTS_02_1.VOB VTS_02_2.VOB > MYVOB.VOB என்று vob கோப்புகளை ஒன்றாக சேர்த்துக்கொள்ளவேண்டும். இப்போது myvob.vob என்ற ஒன்றிணைக்கப்பட்ட கோப்பு உருவாகியிருக்கும்.
பின்னர் டெர்மினலில்
mplayer MYVOB.VOB -aid ${AID} -dumpaudio -dumpfile my_audio.ac3 என்பது கட்டளையின் வடிவமாகும். இதில் ${AID} என்பற்கு பதிலாக ஆடியோ சேனலின் எண்ணை போட வேண்டும். அதாவது இதன் range 128 லிருந்து 159 க்குள் இருக்க வேண்டும்.
mplayer MYVOB.VOB -aid 128 -dumpaudio -dumpfile my_audio.ac3
இப்போது my_audio.ac3 என்ற வடிவில் ஒரு ஆடியோ கோப்பு உருவாகியிருப்பதை காணலாம்.
No comments:
Post a Comment