உபுண்டு தற்போது graphical modeல் தான் திறக்கிறது. இதையே console modeல் திறக்க வைக்கமுடியும்
அதற்கு /etc/default/grub கோப்பில் கீழ்கண்டவாறு மாற்றம் செய்து செமிக்க வேண்டும்.. முதலில் டெர்மினலில்
sudo gedit /etc/default/grub என்று தட்டச்சு செய்து கோப்பினை திறந்து கொள்ளவேண்டும். பின்னர் கோப்பில்
GRUB_CMDLINE_LINUX_DEFAULT=”quiet splash” என்பதற்கு பதில்
GRUB_CMDLINE_LINUX_DEFAULT=”quiet splash text” என்று மாற்றம் செய்ய வேண்டும்.
இப்போது grub update செய்ய டெர்மினலில்
sudo update-grub2 என்று தட்டச்சு செய்து கணினியை மீண்டும் துவக்க console mode ல் வந்து நிற்கும் தேவையில்லை என்றால் மீண்டும் grub கோப்பில் பழையபடியே மாற்றம் செய்து செமிக்க வேண்டும்.
மறக்கமால் sudo update-grub2 என்று தட்டச்சு செய்யவேண்டும்.
No comments:
Post a Comment