Pages

Monday, February 1, 2010

உபுண்டுவில் mplayer ஐ எப்படி default player ஆக்குவது.

உபுண்டுவில் default movie playerஆக totem movi player தான் இருக்கிறது. அவ்வாறில்லாமல் mplayer ஐ எப்படி default movi player ஆக்குவது என்பது பற்றி பார்ப்போம்.

ஏதாவது ஒரு வீடியோ கோப்பின் கர்சரை வைத்து இடது சொடுக்கினால் வரும் விண்டோவில் properties தேர்ந்தெடுக்கவேண்டும். அதில் open with என்ற option தேர்ந்தெடுத்து அதில் இருக்கும் பல்வேறு playerகளின் பெயர்களில் mplayer தேர்ந்தெடுத்து ok செய்தால் mplayer default ஆக இருக்கும்.

நெருப்பு நரி உலாவியில் default player ஆக totem தான் இருக்கிறது. இதிலும் mplayer ஐ default player ஆக்க address barல் about: config என்று தட்டச்சு செய்யவேண்டும்.




பின்னர் filterல் "network.protocol-handler.app.rstp" என்று தட்டச்சு செய்தால் இந்த string வரும். இந்த string இல்லையேன்றால் கர்சரை வெற்றிடத்தில் வைத்து இடது சொடுக்கினால் வரும் விண்டோவில் இதே போல் தட்டச்சு செய்யவேண்டும்.


இதில் ok கொடுத்தால் வரும் விண்டோவில் mplayer என்று தட்டச்சு செய்ய வேண்டும்.


இப்போது நெருப்பு நரி உலாவியிலும் mplayer default ஆக இருக்கும்.

No comments:

Post a Comment