உபுண்டுவில் நாம் கடைசியாக பார்த்த documentகளின் பெயரானது
Places->recent documents சென்றால் பார்க்கலாம். மேலும் அங்கேயிருந்தும் கோப்புகளை இயக்கலாம். இதை ஒரு பாதுகாப்பு கருதியும் செயல்படுத்தலாம்.
இதன் கோப்பு gtkrc-2.0 ஆகும். இதனை செயல்படுத்த முதலில் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்யவேண்டும்.
touch ~/.gtkrc-2.0
பின்னர் இந்த கொப்பினை எடிட் செய்வதற்கு டெர்மினலில்
sudo gedit ~/.gtkrc-2.0 என்று தட்டச்சு செய்து கோப்பினை திறந்து அதில் கீழ்கண்ட வரிகளை செர்த்து சேமிக்கவேண்டும்.
gtk-recent-files-max-age=0
இப்போது recent documents ல் ஏதுவும் இல்லாமல் இருப்பதை காணலாம்.
இப்போது நாம் பார்த்த கோப்புகளை பிறர் அறியாமல் மறைக்கலாம்.
No comments:
Post a Comment