உபுண்டு டெர்மினலில் history என்னும் கட்டளை தட்டச்சு செய்யும்போது அதில் தேதி மற்றும் நேரம் வராது.
ஆனால் இதை வரவழைப்பதற்கு home அடைவினுள் இருக்கும் bashrc என்னும் கோப்பில் கீழ்கண்ட வரிகளை சேர்ப்பதன் மூலம் வரவழைக்க முடியும்.
export HISTTIMEFORMAT="%d/%m/%y %T "
பின்னர் டெர்மினலில் bash என்று தட்டச்சு செய்வதன் மூலம் செயல்படுத்தமுடியும்.
இப்போது டெர்மினலில் history என்னும் கட்டளை தட்டச்சு செய்யும்போது கட்டளையின் தேதி மற்றும் நேரம் தெரியும்.
history என்னும் கட்டளை ஆனாது கணினியில் டெர்மினலில் நாம் தட்டச்சு செய்யும் கட்டளைகளின் தொகுப்பை வரிசையாக திரையில் வரவழைப்பதற்கான கட்டளையாகும்.
தேவையில்லை என்று நினைத்தால் bashrc என்னும் கோப்பில் இருந்து மேலே சொன்ன வரிகளை நீக்கிவிடலாம்.
No comments:
Post a Comment