Pages

Saturday, April 3, 2010

உபுண்டுவில் desktop gnome gdesklets

புண்டு desktop இல் பல்வேறு deskletsகளை அமைக்கலாம். gdesklets என்பது google gadgets போன்றது. நேரம்,அலாரம்,நினைவுட்டல், மற்றும் பல gadgets அமைக்கலாம். இதை கணினியில் நிறுவுவதற்கு synaptic package managerஇல் வழி இருக்கிறது.

synaptic package managerஐ திறந்து அதில் searchல் gdesklets என்று தட்டச்சு செய்து எண்டர் பொத்தானை அழுத்தினால் இரண்டு நிரல்கள் காணப்படும்.


நிரல்களை தேர்வு செய்து நிறுவிக்கொள்ளலாம்.பின்னர் applications->accessories->gdesklets தேர்ந்தெடுத்தால் இதன் icon top panelல் தோன்றும்.



இதில் பல்வேறு gadgets உள்ளது. நேரம், அலாரம்,நினைவுட்டல்,காலண்டர்,cpu memory, ram memory மற்றும் பலவகையான gadgets கள் உள்ளன. தேர்ந்தெடுத்தவுடன் அப்படியே இழுத்து மேசையின் மீது நாம் விரும்பும் இடத்தில் வைக்கலாம்.

மேசையின் மீது இருக்கும் gadget ன் மீது இடது சொடுக்க வரும் விண்டோவில் பல optionகள் இருக்கும்.அதில் நமக்கு தேவைப்பட்டால் நீக்கிவிடலாம் அல்லது விருப்பமான இடத்திற்கு மாற்றம் செய்யலாம். configure செய்யலாம் gadgetன் நிறத்தை மாற்றலாம்.


No comments:

Post a Comment