உபுண்டு rythamboxல் இசை கோப்புகளை இயக்க music->import file (or) import folder என்று சேர்ப்போம். அப்படியில்லாமல் இசை கோப்புகளை தேர்ந்தெடுத்து nautilus script மூலம் சேர்த்துக்கொள்ளலாம்.
முதலில் டெர்மினலில்
sudo apt-get install python-nautilus
wget http://seemanta.net/code/Nautilus_plugin/add-to-rhythmbox.py
mkdir ~/.nautilus/python-extensions
mv add-to-rhythmbox.py ~/.nautilus/python-extensions/
என்ற கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக தட்டச்சு செய்து கொள்ளவேண்டும். பின்னர் கணினியை மீளதுவங்க வேண்டும்.
இப்போது applications->Sound & video->rythambox music player தேர்ந்தெடுத்து playerஐ துவக்கி கொள்ளவேண்டும்.
பின்னர் இசை கோப்புகள் இருக்கும் அடைவை திறந்து அதில் இசை கோப்புகளை தேர்ந்தெடுத்துகொள்ளவேண்டும்.
கோப்புகளை தேர்ந்தெடுத்த பின்னர் இடது சொடுக்கினால் வரும் optionனில் add to rythambox play queue சொடுக்கினால் கோப்புகள் rythamboxல் சேர்ந்துவிடும்.
இதில் mp3 கோப்புகளையும் சேர்க்கலாம். அதன் extension '.mp3' என்று இருக்க வேண்டும். '.MP3 என்றோ அல்லது .Mp3 என்றோ இருக்க கூடாது.
No comments:
Post a Comment