உபுண்டுவில் bootchart என்பது எவ்வளவு நேரத்தில் கணினியை இயக்க ஆரம்பிக்கிறது என்பதை காண உதவும் ஒரு நிரல் ஆகும். இதை நிறுவிக்கொள்ள டெர்மினலில் கீழ்கண்ட கட்டளை தரவேண்டும்.
sudo apt-get install bootchart
இந்த நிரலை நிறுவியப்பின் கணினியை மீளதுவங்கவேண்டும்.
இதன் log கோப்புகள் /var/log/bootchart என்ற அடைவினுள் சேமிக்கப்படும். இந்த நிரல் நேரத்தை மட்டும் கணக்கிடவில்லை. பூட்டிங்கின் போது நிகழும் செயல்படுகளையும் படமாக தருகிறது.ஒரு png கோப்பாக சேமிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறை மீளதுவங்குபோதும் தனித்தனி png கோப்பாக செமிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment