உபுண்டுவில் filesystem தினை திறப்பதற்கு places சென்று தான் திறப்போம். அப்படியில்லாமல் desktopலிருந்தே திறக்க முடியும். file systemதினை மட்டும் அல்லாமல் ஒரு அடைவினை கூட desktop லிருந்தே திறக்கலாம். இதை top panelல் வைத்துக்கொள்ளலாம்.
முதலில் மேசைமேது ஒரு வெற்றிடத்தில் வலது சொடுக்க வரும் optionல் Create Launcher ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதில் Nameல் File system என்று கொடுத்துக்கொள்ளலாம்.
Commandல் nautilus / என்று தட்டச்சு செய்துவிட்டு பின்னர் ok அழுத்தவேண்டும். இந்த iconஐ மாற்ற வேண்டுமானல் icon பகுதியில் சென்று சொடுக்கினால் வரும் பல்வேறு iconல் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
இப்போது திரையில்
இதிலேயே சொடுக்கி திறக்கலாம் இல்லையேன்றால் icon மீது கர்சரை வைத்து அப்படியே இழுத்துக்கொண்டுபோய் top panelல் விட்டுவிடலாம்.
இதன் மீது கர்சரை வைத்து சொடுக்கினால் file system திறக்கும்.
இது வேறு அடைவுகளையும் திறக்கலாம். அதன் commandல் கொடுத்துள்ள கட்டளையில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் செய்யலாம்.
nautilus / பதிலாக nautilus /media என்று தட்டச்சு செய்தால் media அடைவு திறக்கும்.
Thanks for the useful tips.. i am using ubuntu 10.04 in my acer laptop
ReplyDelete