உபுண்டுவில் இரவு நேரங்களில் வேலை செய்யும் போது நம்முடைய கண்களை அதிக வெளிச்சத்திலிருந்து பாதுகாக்க redshiftgui என்ற நிரல் பயன்படுகிறது. சரியாக இரவு நேரம் வந்தவுடன் கணினி திரை சற்று மங்கலாக தெரியும். இந்த நிரலை நிறுவுவதற்கு சுட்டியிலிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளவேண்டும்.
Redshiftgui
Applications->accessories->redshiftgui செல்ல வேண்டும்.
பின்னர் location தேர்ந்தெடுத்து நம்முடைய ip முகவரியோ அல்லது ஊரின் பெயரையோ கொடுக்க வேண்டும்.
இதில் சேவ் பொத்தானை அழுத்தி வெளியேறவேண்டும்.
பின்னர் தானாகவே brightnessஐ சரிசெய்துகொள்கிறது.
இதில் settings பொத்தானை அழுத்தி வெப்பநிலையை சரிசெய்துகொள்ளலாம்.
பின்னர் இந்த நிரல் தானாகவே தொடங்க
Systems->Preferences->Startup applicationsல் சேர்த்துவிட வேண்டும்.
No comments:
Post a Comment