உபுண்டுவில் படங்களை கையாள்வதற்கு அதாவது format மாற்றுவதற்கு, அளவுகளை மாற்ற மற்று சுருக்குவதற்கு உதவும் நிரல் converseen. மொத்தமாக படங்களின் அளவுகள் மற்றும் format போன்றவற்றை மாற்றமுடியும். இந்த நிரலை நிறுவ முதலில் டெர்மினலில்
sudo add-apt-repository ppa:samrog131/ppa
sudo apt-get update && sudo apt-get install converseen
என்று தட்டச்சு செய்து நிறுவக்கொள்ளவேண்டும். பின்னர் Applications->Graphics->converseen செல்ல வேண்டும்.
இதில் add images என்ற பொத்தானை அழுத்தி படங்களை சேர்த்துக்கொள்ளலாம்.
இங்கு படத்தின் அளவுகள் மற்றும் format போன்றவற்றை மாற்றிக்கொள்ளமுடியும். பின்னர் convert பொத்தானை அழுத்தினால் படங்கள் நாம் விரும்பியபடி மாறிவிடும்.
படங்களை மொத்தாமாக மாற்றுவதற்கும் இதில் வசதி உள்ளது.
இந்த நிரலை deb கோப்பாக பெறுவதற்கான சுட்டி.
No comments:
Post a Comment