உபுண்டு top panelல் சிலசமயம் அதில் உள்ள iconகள் காணாமல் போய்விடும். சில சமயங்களில் நாமே தவறுதலாக அழித்துவிட வாய்ப்பு இருக்கிறது. sound icon காணாமல் போனால் ஒரு சில நிமிடங்களிலேயே வரவழைத்துவிடலாம்.
முதலில் system->preference->startup applications சென்று இந்த நிரல் சேர்க்கப்பட்டு உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
இல்லையேன்றால் add பொத்தானை அழுத்தி சேர்த்துக்கொள்ளவேண்டும்.
Name->Sound appelet
Command->/usr/bin/gnome-volume-control-applet என்று தட்டச்சு செய்து save பொத்தானை அழுத்தி செமித்துக்கொள்ளவேண்டும்.பின்னர் close பொத்தானை அழுத்தி வெளியேறிவிடவேண்டும்.
பின்னர் மேசைமீது Alt+F2 அழுத்தி வரும் விண்டோவில்
gnome-volume-control-applet என்று தட்டச்சு செய்து run பொத்தானை அழுத்தவேண்டும்.
மீண்டும் கணினியை துவங்க sound icon top panelல் இருப்பதை காணலாம்.
இந்த gnome-volume-control-appelet ஆனது /usr/bin/ என்ற அடைவினுள் இருக்கிறது.
No comments:
Post a Comment