Pages

Sunday, September 26, 2010

உபுண்டுவில் படங்களின் slideshow வை desktop wallpaperஆக வைப்பதற்கு

உபுண்டுவில் படங்களின் slideshow வை அப்படியே desktopல் wallpaper ஆக வைக்கலாம். இதற்கு முதலில் OpenJDK Java 6 Runtime என்ற நிரலை ubuntu software centreல் தேடிப்பார்த்து நிறுவிக்கொள்ளவேண்டும்.



பின்னர் இந்த சுட்டியிலிருந்து jar கோப்பினை தரவிறக்கி கொள்ளவேண்டும்.


இந்த கோப்பின் மீது கர்ஸரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் properties->Permissions சென்று அதில் execute என்பதற்கு நேராக டிக் மார்க் செய்ய வேண்டும்.


பின்னர் close பொத்தானை அழுத்தி வெளியேறிவிடவேண்டும்.

இப்போது தரவிறக்கப்பட்ட jar கோப்பின் மீது கர்ஸரைவைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் open with other applications->OpenJDK Java 6 Runtime என்பதனை தேர்ந்தெடுத்து open பொத்தானை அழுத்தவேண்டும்.


இப்போது கீழ்கண்ட விண்டோ வரும்.


இதில் browse பொத்தானை அழுத்தி எந்த அடைவினுள் படங்களை இருக்கிறதோ அதை தேர்ந்தெடுக்கவேண்டும். Durationல் வால்பேப்பர் எத்தனை விநாடிகள் தோன்ற வேண்டுமொ அதை அமைத்துக்கொள்ளவேண்டும்.



எல்லாவற்றையும் அமைத்த பின்னர் create xml என்ற பொத்தானை அழுத்தியவுடன் Background.xml என்ற கோப்பு படங்கள் அடங்கிய அடைவினுள் உருவாகிவிடும்.


பின்னர் desktopல் வெற்று இடத்தில் கர்ஸரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் change desktop background என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.


மேல் கண்ட விண்டோவில் 1 என்ற இடத்தில் all files என்பதனை தேர்ந்தெடுத்தால் 2 என்ற இடத்தில் புதியதாக உருவாகி இருக்கும் xml கோப்பினை தேர்ந்தெடுத்து open பொத்தானை அழுத்தி வெளியேறிவிடவேண்டும்.

இப்போது desktopல் படங்கள் slideshow ஆக தொன்றுவதை பார்க்கலாம்.

2 comments:

  1. நல்ல தகவல் எனது laptop-இல் முயற்சிக்கிறேன் நன்றி....

    ReplyDelete
  2. நல்ல பதிவு நன்றி!!!

    ReplyDelete