Pages

Sunday, October 31, 2010

உபுண்டு rhythmboxல் 10 band equaliser plugin சேர்த்தல்

உபுண்டு ரிதம்பாக்ஸில் equaliser இருப்பதில்லை. இதனை pluginஆக சேர்த்து ஒலியின் தரத்தை மேம்படுத்த உதவும். முதலில் டெர்மினலில்

wget http://jorge.fbarr.net/files/rhythmbox-eq.tar.gz

இதன் பிறகு /.gnome2/rhythmbox/plugin என்ற ஒரு அடைவினை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

mkdir -p ~/.gnome2/rhythmbox/plugins/

பின்னர் தரவிறக்கப்பட்ட rhythmbox-eq.tar.gz என்ற கோப்பினை விரித்து மேலே சொன்ன அடைவினுள் சேர்த்துவிடவேண்டும்.

tar -zxvf rhythmbox-eq.tar.gz -C ~/.gnome2/rhythmbox/plugins/

இப்போது Applications->Sound&video->Rhythmbox music player->edit->plugins செல்ல வேண்டும்.




இப்போது equaliser plugin சேர்ந்துவிட்டிருக்கும். பின்னர் வலது பக்கமுள்ள configure பொத்தனை அழுத்தினால் equaliserஐ ஒலி அமைப்புகளை நம் தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.



இதில் delete பொத்தானை அழுத்தினால் default ஆக உள்ள அமைப்புகள் திரும்ப வந்துவிடும்.

No comments:

Post a Comment