உபுண்டுவில் மவுஸின் இடது பக்க பொத்தானிலேயே வலது பக்க பொத்தனின் செயல்பாட்டை வைக்க முடியும்.
வெற்று மேசையின்மீது கர்சரை வைத்து வலது சொடுக்க வரும் ஆப்ஷன் விண்டோவானது இடது சொடுக்கலேயே வரவழைக்க முடியும்.
இதற்கு System->Preferences->Mouse->Accessibility செல்ல வேண்டும்.
மேலே உள்ள விண்டோவில் Trigger secondary click holding down the primary button என்ற ஆப்ஷனை டிக் செய்திட வேண்டும்.
பின்னர் மேசையின்மீது வெற்று இடத்தில் கர்சரை வைத்து மவுஸின் இடது பொத்தானை சிறிது விநாடிகள் அழுத்த மவுஸின் வலது பொத்தானை அழுத்தினால் வரும் ஆப்ஷன்கள் எல்லாம் வரும். இதை ஒரு கோப்பின் மீதும் செயல்படுத்தலாம்.
No comments:
Post a Comment