உபுண்டுவில் எந்த ஒரு டிரைவ் அதாவது ஒரு partition உபுண்டு லாகின் ஆகி வரும்போது தானாக mount ஆகும்படி செய்ய முடியும்.
முதலில் டெர்மினலில்
sudo fdisk -l என்று கட்டளை கொடுத்து எந்த partition என்று தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும்.
டெர்மினலில்
sudo mkdir /media/mpoint என்று தட்டச்சு செய்ய வேண்டும். mpoint என்பது நம் விருப்பம் போல் பெயர் இருக்கலாம்.
பின்னர் /etc/fstab என்ற கோப்பினை திறந்துகொள்ளவேண்டும்.
sudo gedit /etc/fstab
இந்த கோப்பில் கீழ்கண்ட வரியை சேர்த்துவிட வேண்டும்.
/dev/sda7 /media/mpoint ntfs-3g default 0 0
இங்கு mpoint என்பது நம் விருப்பம் போல் கொடுத்த பெயர் ஆகும். இப்போது கணினியை மீள துவங்க டிரைவ் மேசையின்மீது இருப்பதை பார்க்கலாம்.
No comments:
Post a Comment