உபுண்டு ஏப்ரல் 2011 ல் வரவிருக்கும் புதிய வெர்ஷன் 11.04 Natty Narwhal பதிப்பில் gnome desktopஐ எடுத்துவிட்டு unity desktop வரப்போவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மேசை எப்படி இருக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.
இந்த மேசையை 10.10ல் நிறுவ முதலில் டெர்மினலில்
sudo apt-get install unity என்று தட்டச்சு செய்து நிரலை நிறுவிக்கொள்ள வேண்டும். பின்னர் logout செய்து மீண்டும் உள்ளே வரவேண்டும். உள்ளே வரும் சமயம் login செய்யும்முன் sessionல் gnome netbook edition என்று தேர்ந்தெடுக்க வேண்டும்.
இது பற்றிய ஒரு வீடியோ
உபுண்டுவில் இருந்து மாறுவதற்கு இதை விட வேறு காரணங்கள் இருக்க முடியாது. க்னோம் டெஸ்க்டாப் தான் லினக்ஸின் வடிவத்தையே மாற்றி அமைத்தது. உபுண்டு அதை உதறி தள்ளினால், அதை நிராகரிப்பதை தவிர வேறு வழியில்லை.
ReplyDeleteஇனி டெஸ்க்டாப்பிற்கு மட்டுமே உபுண்டு லாயக்கு. அதிக க்ராஃபிக் பெர்ஃபாமன்ஸினால் விண்டோஸை விட என் நெட்புக்கில், உபுண்டு பேட்டரியை உறிஞ்சுகிறது. இத்தனைக்கும் நான் லுபுண்டுவில் (LXDE) தான் பெரும்பாலும் உலவுகிறேன்.
வாருங்கள் பிரசன்ன ராஜன். நானும் gnome விரும்பிதான். வேண்டுமென்றால் gnome நிறுவிக்கொள்ளலாம்.
ReplyDeleteArul mozhi nengal VAMSAM Entra folder ulladhu atha delete pannunga veena en vampu
ReplyDeleteநன்றி பெயரிலி அந்த அடைவு விண்டோஸில் உள்ள ஒருவகை வைரஸ். அதை அப்போதே அழித்துவிட்டேன்.
ReplyDelete