Pages

Thursday, December 23, 2010

உபுண்டு டெர்மினலில் காலண்டர் வரவழைக்க



உபுண்டு டெர்மினலில் காலண்டரை வரவழைக்க அதாவது Applications-> Accessories-> Terminal செல்லும் போது காலண்டரை வரவழைக்க முடியும்.

முதலில் டெர்மினலில்

sudo gedit /bin/greetings.sh என்று தட்டச்சு செய்து bin அடைவினுள் greetings.sh என்ற ஒரு காலி கோப்பினை திறந்து கொள்ள வேண்டும்.

பின்னர் கீழே உள்ள வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்துவிட்டு பின்னர் டெர்மினலில்

echo "Welcome to the Ubuntu OS, $USER!"
echo 'System uptime:'
uptime
cal


sudo chmod +x /bin/greetings.sh என்று தட்டச்சு செய்து ஸ்கிரிப்டினை இயங்ககூடிய நிலையில் வைக்க வேண்டும்.

பின்னர் home அடைவினுள் இருக்கும் bashrc கோப்பினை திறக்க டெர்மினலில் கீழ்கண்ட வரியினை தட்டச்சு செய்ய வேண்டும்.

gedit ~/.bashrc

அதில் கீழ்கண்ட வரியினை அதில் சேர்த்துவிட வேண்டும்.

/bin/greetings.sh

பின்னர் செமித்து வெளியேறிவிடவேண்டும். பின்னர் டெர்மினலில் திறக்க காலண்டர் கிடைக்கும்.

3 comments:

  1. Terminalஐ துவக்கும்போது எனக்குஇவ்வாறு தகவல் வருகிறது. இதை எப்படி சரி செய்வது என தெரிவிக்க வேண்டுகெறேன்.

    bash: /bin/greetings.sh: Permission denied
    tdvel@tdvel-laptop:~$

    ReplyDelete
  2. நான் டெர்மினலை துவக்கும்போது இவ்வாறான செய்தி வருகிறது.
    bash: /bin/greetings.sh: Permission denied
    tdvel@tdvel-laptop:~$

    ReplyDelete
  3. வாருங்கள் துரைவேல். டெர்மினலில் sudo chmod +x /bin/greetings.sh என்று கட்டளை கொடுங்கள். இந்த பிழை சரியாகும்.

    ReplyDelete