Pages

Thursday, December 2, 2010

உபுண்டுவில் messaging menuவில் உள்ள தேவையில்லாத நிரலை நீக்குதல்

உபுண்டு top panelல் உள்ள messaging men வில் மூன்று நிரல்கள உள்ளன. அவை chat, evolution,broadcast ஆகியவை ஆகும். இதில் ஏதாவது ஒன்று தேவையில்லை என்றால் அந்த நிரலை messaging menuவிலுருந்து நீக்கிவிடலாம்.



முதலில் இதற்கான கோப்புகள் எங்கே இருக்கிறது என்று பார்ப்போம்.

/usr/share/indicators/messages/applications என்ற அடைவினுள் இருக்கிறது.



இதில் gwibber என்ற நிரலை நீக்க விரும்பினால் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo rm /usr/share/indicators/messages/applications/gwibber இந்த கட்டளையினால் gwibber என்ற கோப்பு அழிக்கப்பட்டுவிடும்.

பின்னர் கணினியை மீள துவங்கினால் broadcast என்ற நிரல் messaging menuவில் இருக்காது.


மீண்டும் வரவழைக்க விரும்பினால் டெர்மினலில்

sudo gedit /usr/share/indicators/messages/applications/gwibber என்று தட்டச்சு செய்து gwibber என்ற காலி டெக்ஸ்ட் கோப்பினை திறந்து கொள்ள வேண்டும். அதில் கீழ்கண்ட வரியை சேர்த்து செமித்து வெளியேறிவிடவேண்டும்.

/usr/share/applications/gwibber.desktop

பின்னர் கணினியை மீளதுவங்க இப்போது messaging menuவில் gwibber வந்துவிட்டிருக்கும்.

No comments:

Post a Comment