உபுண்டுவில் youtube.com ல் உள்ள வீடியோக்களை vlc/mplayerல் ஒடவைக்க முடியும். அதாவது flash நிறுவமலேயே youtube வீடியோக்களை பார்க்க இயலும்.
முதலில் டெர்மினலில் yt என்னும் பெயருடைய கோப்பினை திறந்துகொள்ள வேண்டும். பெயர் நம் விருப்படி கொடுத்துக்கொள்ளலாம்.
sudo gedit /usr/local/bin/yt
இந்த கோப்பில் கீழ்கண்ட வரிகளை சேர்த்து செமித்துக்கொள்ள வேண்டும்.
#!/bin/bash
FLASH_TMP=`ls /tmp | grep Flash*`
if [[ $FLASH_TMP ]]; then
vlc /tmp/Flash*;
else
flashvids() { lsof -p `ps x | awk '/libflashplayer.so\ /{print $1}'` -n 2>/dev/null | perl -lne '@F = split(/ +/, $_, 9); print "/proc/$F[1]/fd/${\($F[3] =~ /(^\d+)/)[0]}" if $F[4] eq "REG" && $F[8] =~ /\(deleted\)$/'; }
vlc $(flashvids)
fi
பின்னர் இந்த ஸ்கிரிப்டை இயக்க நிலையில் வைக்க கீழ்கண்ட வரியை டெம்ரினலில் தட்டச்சு செய்ய வேண்டும். மேற்கண்ட ஸ்கிரிப்டில் vlc க்கு பதில் mplayer என்பதாகவும் இருந்தால் வீடியோக்கள் mplayerல் காணலாம்.
sudo chmod +x /usr/local/bin/yt
பின்னர் டாப் பேனலில் கிளிக் செய்து Add to panelல்->custom application launcher என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதில்
Name->Flash
Command->/usr/local/bin/yt
என்பதாக தட்டச்சு செய்து close பொத்தானை அழுத்தி வெளியேறவேண்டும்.
இப்போது நெருப்பு நரியில் youtube.com ஐ திறந்து ஒரு வீடியோவை இயக்கவேண்டும். பின்னர் டாப் பேனலில் இருக்கும் ஐகானை கிளிக் செய்தால் youtube வீடியோக்கள் vlc/mplayerல் காண முடியும்.
மேலே உள்ள படம் வீடியோ flash playerல் ஒடியது. அதே வீடியோ vlcயில் ஒடும்போது கீழ்கண்டவாறு இருக்கும்.
இப்போது இரண்டு வீடியோக்களும் ஒடும். Flashல் ஒடுவதை நிறுத்திவிடலாம்.
totem என்னும் ஊடக இயக்கியில் you tube நிழ்ற்படங்களை தேடி பார்க்கலாம். இதற்கு எந்த புதிய மென் பொருளும் நிருவ தேவையில்லை.
ReplyDelete