உபுண்டுவில் தமிழ் விசைப்பலகைக்கான driverகளை அண்மையில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான சுட்டி
இந்த சுட்டியிலிருந்து கோப்பினை தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம். இந்த கோப்பு zip வடிவில் கிடைக்கிறது. இதனை விரித்து மேசைமீதே வைத்து கொண்டேன். பெரிய பெயராக இருந்ததால் அதனை சிறிய பெயராக மாற்றிக்கொண்டேன்.இதனை நிறுவுவது சுலபம். அதிலேயே வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ் 99 விசைப்பலகை உள்ளது.
எனவே டெர்மினலில் விசைப்பலகை அடைவிற்கு சென்று கீழ்கண்டவாறு கட்டளை கொடுக்க வேண்டும்.
எனவே டெர்மினலில் விசைப்பலகை அடைவிற்கு சென்று கீழ்கண்டவாறு கட்டளை கொடுக்க வேண்டும்.
sudo su
sh Install
என்று கொடுத்தால் போதும் நிறுவப்பட்டுவிடும்.
இதன் driver களை இயக்குவதற்கு Applications->Tamil Keyboard Interface->TN Govt.Keyboard Interface செல்ல வேண்டும்.
இப்போது டாப் பேனலில் இதன் ஐகான் இருப்பதை காணலாம். இதில் வலது சொடுக்கினால் பல ஆப்ஷன்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
இதில் help தேர்ந்தெடுத்து விசைப்பலகையை திரையில் காணமுடியும். முதலில் பழக இதனை பார்த்து தட்டச்சு செய்துகொள்ளலாம்.
இதனை geditல் பயன்படுத்தலாம்.
Libre officeலும் பயன்படுத்த முடியும்.
இதன் குறைகள்
நெருப்பு நரி மற்றும் தண்டர்பேர்டில் பயன்படுத்த முடியவில்லை.
இது ஒரு சோதனை பதிப்புதான். நிறைகுறைகள் கேட்கப்பட்டு உள்ளது. வெகு விரைவில் மேற்கண்ட குறைகள் சரியாகிவிடும்.
தமிழக அரசின் நல்ல முயற்சி. இது பினொடிக் முறை உபயோகின்றதா?
ReplyDeleteவாருங்கள் pakkatechies. தமிழக அரசு என்பதால் தமிழ் 99 விசைப்பலகையைதான் கொடுப்பார்கள். பினொடிக் வருவதற்க்கு வாய்ப்பு இல்லை.
ReplyDelete@pakkatechies சென்றவருடம் ஒருங்குறி மற்றும் டேஸ் (TACE) குறியேற்றங்களுக்காக தமிழக அரசு வெளியிட்ட தமிழ்99 மற்றும் தமிழ் தட்டச்சு (அது ரெமிங்கடன் வகை) ஆகிய 4 (2 x 2) விசைமாற்றிகளுக்கான சீர்தரங்களுக்கு கட்டும்படி வகையில் அமைத்துள்ளனர். எல்லா விதிகளும் சரியாக பின்பற்றுள்ளனவா என்பதை இன்னும் நான் சோதித்தறியவில்லை.
ReplyDelete@arulmozhi r தற்போதைய உபுண்டு 11.04 இல் முன்னிருப்பான யுனிட்டி கணிமேசையில் பயன்படுத்த இயலா நிலை உள்ளது. காரணம் இயக்குகையில் பலகத்தில் ஓவம் (icon) சேர்வதில்லை. குறுக்கு விசைகளும் (hot keys) இயங்குவதில்லை. எனவே முன்னிருப்பான ஒருங்குறி-தமிழ்99 இலிருந்து ஆங்கிலம் மாற இயலா வழுநிலை.
யுனிட்டியில் இருக்கையில் gnome-panel ஆணை இட்டு ஒரு gnome பலகத்தை கொண்டு வந்தால் அதில் ஓவம் சேர்கிறது. அவ்வறு பயன்படுத்த இயலுமானானலும் வேறு பிரச்சினைகள் எழுகின்றன.
gnome, kde கணிமேசைகளில் இயக்குவதற்கு அப் பிரச்சினைகள் இல்லை