உபுண்டுவில் gnome panel கள் நிறுவியிருப்போம். அதன் வடிவங்கள் நமக்கு புதியவையாக இருந்தாலும் மீண்டும் default gnome panelலுக்கு திரும்ப வர கீழ்கண்ட கட்டளைகளை டெர்மினலில் தட்டச்சு செய்யவேண்டும்.
டெர்மினலில்
gconftool --recursive-unset /apps/panel
என்று முதலில் தட்டச்சு செய்யவேண்டும். பின்னர் தற்போது இருக்கும் panelஐ நீக்க கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.
rm -rf ~/.gconf/apps/panel
பின்னர் default panel திரும்ப வருவதற்கு
pkill gnome-panel
மேற்கண்டவாறு தட்டச்சு செய்தால் default gnome panel மீண்டும் வரவழைக்கலாம்.
permission denied என்று வந்தால் கட்டளையின் முன் sudo செர்த்துகொள்ளவேண்டும்.
உங்களை போல் நிறைய பேர் சொல்றாங்க என்று நானும் உபுண்டு டுயல் பூட் இன்ஸ்டால் செய்தேன்
ReplyDeleteஅனால் சில நாட்கள் பின்னர் டுயல் பூட் விண்டோவ்வே வரவில்லை. powerஐ ஆப் பண்ணி ஒன பண்ணினால் சில சமயம் வந்தது. சில சமயம் உபுண்டு விண்டோ வரவில்லை. லினக்ஸ் எல்லாம் உங்களை போன்ற சாப்ட்வேர் வல்லுலர்ணகளுக்கு தான் சரிபட்டுவரும்.
உபுண்டு பற்றிய பல உபயோகமான தகவல்களை பலருக்கும் பயன்படும் விதமாக தொடர்ந்து வழங்கி வருகிறீர்கள்.. மிக்க நன்றி!...
ReplyDeleteஉங்கள் சேவை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..
(உங்கள் பிளாக்கில் வேர்டு வெரிபிகேஷனை நீக்கி விடுங்கள்.. )
நன்றி கண்ணன்
ReplyDeleteநன்றி சூர்யா கண்ணன்
@கண்ணன்
உங்கள் வருகைக்கு நன்றி உங்கள் கணினியில் ஏதேனும் கோப்பு இல்லாமல் இருக்கலாம். grub மீண்டும் நிறுவி பாருங்கள். சாப்ட்வேர் வல்லுனர்களுக்கு என்று இல்லை சாதாரணமாக உபயோகிப்பாளர்களுக்கும் கூட உபுண்டு எளிமையானது.விண்டோ கூட ஆரம்பத்தில் கடினமாகதான் இருக்கும்.
@சூர்யாகண்ணன்
வேர்டு வெரிபிகேஷன் நீக்குவதால் வலைப்பூ தாக்குதலுக்கு ஆளாகும் என எச்சரிக்கை வந்ததால் வைத்திருக்கிறேன்.