Pages

Saturday, January 9, 2010

உபுண்டுவில் iso image mount செய்வது பற்றி பார்ப்போம்.

உபுண்டுவில் iso mount செய்வது அதாவது எந்த ஒரு சிடியிலும் எழுதாமல் பார்க்க

முதலில் டெர்மினலில்

#sudo mkdir -p /mnt/isodir என்று தட்டச்சு செய்தால் isodir என்று ஒரு directory உருவாகிவிடும்.

பின்னர் iso கோப்பு எந்த அடைவினுள் இருக்கிறதோ அந்த அடைவினுள் சென்று டெர்மினலில்

#sudo mount -o loop NimbleX-91111asw.iso /mnt/isodir என்று தட்டச்சு செய்யவேண்டும்.

என்னுடைய கணினியில் NimbleX-91111asw.iso என்ற கோப்பினை Desktop வைத்துருக்கிறேன்.

எனவே டெர்மினலில்

#cd Desktop என்று தட்டச்சு செய்து Desktop வரவேண்டும். பின்னர் மேற்கண்ட கட்டளையை தட்டச்சு செய்யவேண்டும்.

பின்னர் டெர்மினலில்

#cd /mnt/isodir என்று தட்டச்சு செய்து isodir என்ற அடைவிற்கு செல்லவேண்டும்.

பின்னர் டெர்மினலில் dir கட்டளையிட்டால் கோப்புகள் தெரியும்.







2 comments: