Pages

Wednesday, January 13, 2010

உபுண்டுவில் nrg image லிருந்து iso image ஆக மாற்றுதல்

உபுண்டுவில் nrg image கோப்பினை iso image கோப்பாக மாற்றலாம். nrg image என்பது nero burning நிரலில் இருந்து உருவாக்கப்பட்டது. இதை நாம் உபுண்டுவிற்கு iso image ஆக மாற்ற கீழ்கண்ட இரண்டு நிரல்களை நிறுவிக்கொள்ளவேண்டும்.

sudo apt-get install nrg2iso iat இங்கு nrg2iso மற்றும் iat என்பது நிரலின் பெயர்களாகும்.

nrg2iso முறை

டெர்மினலில்

nrg2iso image.nrg image.iso என்று கட்டளை கொடுத்தல் nrg image கோப்பு iso image கோப்பாக மாறிவிடும்.

iat முறை

டெர்மினலில்

iat image.nrg image.iso என்று தட்டச்சு செய்யவேண்டும். இந்த நிரல் பல்வேறு கோப்புகளின் வடிவங்களை கையாள்கிறது. iso,bin,nrg,mdf போன்ற கோப்புகளையும் கையாள்கிறது.

No comments:

Post a Comment