Pages

Monday, February 15, 2010

உபுண்டுவில் kernel update

உபுண்டுவில் kernel update செய்வதைப்பற்றி பார்ப்போம். அண்மையில் உபுண்டு kernel பாதுகாப்பிற்க்காக மேம்படுத்திக்கொள்ள சொல்லியது. எனவே மேம்படுத்திக்கொள்ள்வது அவசியமாகிறது. முதலில் டெர்மினலில் நாம் எந்த kernel உபயோகிக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள

uname -a என்று தட்டச்சு செய்யவேண்டும்.


என்ன வெர்ஷன் என்று தெரிந்துகொண்டபின் மேம்படுத்துவதற்க்காக kernal தரவிறக்கவேண்டும்.

kernel தரவிறக்க இந்த சுட்டி செல்லவேண்டும்.


இதில் எது update என்று தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும்.


இந்த மூன்று கோப்புகளையும் தரவிறக்கிக்கொள்ளவேண்டும்.பின்னர் இதை எப்படி நிறுவுவது என்பதை பார்ப்போம்.

1. linux-headers-2.6.32-020632_2.6.32-020632_all.deb

sudo dpkg -i linux-headers-2.6.32-020632_2.6.32-020632_all.deb

2. linux-headers-2.6.32-020632-generic_2.6.32-020632_i386.deb

sudo dpkg -i linux-headers-2.6.32-020632-generic_2.6.32-020632_i386.deb

3. linux-image-2.6.32-020632-generic_2.6.32-020632_i386.deb

sudo dpkg -i linux-image-2.6.32-020632-generic_2.6.32-020632_i386.deb

நிறுவியப்பின் கணினியை மீளதுவங்கவேண்டும். இப்போது மீண்டும் uname -a என்று கட்டளை கொடுத்தால் kernel மேம்படுத்தப்பட்டு இருப்பதை பார்க்கலாம்.

4 comments:

  1. உபுண்டு சம்பந்தமான எனது பல வினாக்களுக்கு இங்கே விடை கிடைக்கப் பெறுகிறேன். ஒரு விண்ணப்பம்.

    தமிழிஷில் படங்கள் - தொழில்நுட்பம் என்கிற கேட்டகரியில் நீங்கள் பதிவுகளை இணைக்கிறீர்கள்.

    இதையே செய்திகள் - தொழில்நுட்பம் என்கிற பிரிவில் இணைத்தால் நிறைய வாசகர்களை நீங்கள் பெறுவீர்கள் என நினைக்கிறேன். முயற்சிக்கவும். நன்றி.

    ReplyDelete
  2. வாருங்கள் டெக் ஷங்கர் ஆலோசனைக்கு நன்றி. நீங்கள் கூறியபடி இணைத்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. நன்றி அருள்மொழி அவர்களே

    ReplyDelete