உபுண்டுவில் ஏதாவது திரைப்படமோ அல்லது நிகழ்ச்சிகளோ ஒடிக்கொண்டிருக்கும்போது நமக்கு தேவையான இடத்தை மட்டும் தனியாக record செய்து பார்க்க முடியும்.
இதற்கான வழிகள் வழக்கமான vlcயிலேயே உள்ளது. vlc திறந்தவுடன் view->advanced control தேர்ந்தெடுத்தவுடன் record பட்டன் தெரிய ஆரம்பிக்கும். இது defaultஆக மறைத்து வைக்கப்பட்டு இருக்கும்.
இதை அழுத்தினால் record செய்ய ஆரம்பிக்கும். தேவையான பகுதி முடிந்தவுடன் மீண்டும் அழுத்தினால் record செய்வது நின்றுவிடும்.
நம்முடைய webcam மூலமாகவும் record செய்ய முடியும். இதற்கு
media->open capture device சென்று play பொத்தனை அழுத்தவேண்டும்.
இதில் record செய்யப்பட்ட வீடியோ avi formatல் இருக்கிறது. home அடைவினுள் செமிக்கப்படுகிறது. ஆனால் totemஇல் இந்த வீடியோவை ஒட விட்டால் பிழை செய்தி வருகிறது. vlcல் மட்டும் வேலை செய்கிறது. sound capture இல்லை.
No comments:
Post a Comment