உபுண்டுவில் இதற்கு முந்தைய பதிவுகளில் sysstat போன்ற கட்டளைகள் பற்றி பார்த்திருப்போம். vmstat,netstat,nfsstat போன்ற கட்டளைகள் நம்முடைய கணினியை பற்றிய தகவல்களை தனிதனியாக தரும்.
ஆனால் இவையெல்லாம் ஒரே கட்டளையில் பெற இந்த நிரல் அதாவது dstat என்ற நிரல் உதவுகிறது. உபுண்டுவில் இது போன்ற கட்டளை நிரல்கள் இருப்பது நமக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. ஏதேனும் பிழை ஏற்பட்டால் இதை வைத்து சரிசெய்து விடலாம்.
முதலில் இந்த நிரலை நிறுவ டெர்மினலில்
sudo apt-get install dstat என்று தட்டச்சு செய்து நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும். பின்னர் டெர்மினலில்
dstat என்று தட்டச்சு செய்தால் கணினியின் செயல்படுகள் பற்றிய புள்ளிவிவரங்கள் வர ஆரம்பிக்கும்.
dstat -M time,cpu,net,disk,sys,load,proc,topcpu என்று கட்டளையிட்டால்
இதில் ஏதேனும் பிழை தென்பட்டால் நாம் உடனடியாக சரிசெய்ய ஆரம்பிக்கலாம்.
No comments:
Post a Comment