உபுண்டுவில் ஒரு டெக்ஸ்ட் கோப்பினை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்கலாம். எப்படி என்று பார்ப்போம்.
இதில் 1. ஒரு சாதரண டெக்ஸ்ட் கோப்பு. 2.encrypt செய்யப்பட்ட கோப்பு. பெயர் mydoc.txt.gpg என்று மாறியிருக்கிறது.
இதற்கு முதலில் டெர்மினலில்
gpg -c mydoc.txt என்று கட்டளையிட வேண்டும். கடவுச்சொல் கேட்கும்.கொடுத்தவுடன் மீண்டும் கேட்கும்.
encrypt செய்த கோப்பினை திறப்பதற்கு கோப்பின் மீது கர்ஸரை வைத்து இரட்டை சொடுக்கினால் திறக்காது.
இதை திறப்பதற்கு டெர்மினலில்.
gpg mydoc.txt.gpg என்று தட்டச்சு செய்யவேண்டும். கடவுச்சொல் கேட்கும். நாம் ஏற்கனேவெ கொடுத்த கடவுச்சொல்லை கொடுக்கவேண்டும்.
ஒரு சாதாரண டெக்ஸ்ட் கோப்பினை கூட இந்த முறையில் பாதுகாத்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment