Pages

Wednesday, April 7, 2010

உபுண்டுவில் எளிய notification

புண்டுவில் இணையம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டால் அதற்கு ஒரு notification திரையின் வலது மூலையில் தோன்றும். இதற்கு noification area என்று அழைப்பர்.


இந்த notification areaவில் நாம் விரும்பும் செய்தியையும் நாம் வரவழைக்க முடியும்.

இதற்கு முதலில் டெர்மினலில்

sudo apt-get install libnotify-bin என்று தட்டச்சு செய்து நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.

இப்போது டெர்மினலில்

notify-send "hello" என்று தட்டச்சு செய்தால்




இதே போல் நாம் விரும்பும் செய்திகளையும் வரவழைக்கலாம்.

இப்போது ஒரு சிறிய நிரலை பார்ப்போம். ஒரு டெக்ஸ்ட் கோப்பினை திறந்து அதில் கீழ்கண்ட வரிகளை தட்டச்சு செய்து செமித்துகொள்ளவேண்டும்.

sudo gedit not கோப்பு திறந்தவுடன்
#!/bin/bash

notify-send "hello"
notify-send "ubuntuintamil.blogspot.com"
notify-send "thankyou"

பின்னர் இந்த கோப்பினை செயல்பட வைக்க டெர்மினலில்

sudo chmod +x not என்று தட்டச்சு செய்யவேண்டும்.

டெர்மினலில்

./not என்று தட்டச்சு செய்தவுடன் ஒவ்வொரு வார்த்தையாக வருவதை பார்க்கலாம்.

இது நிரல் எழுதுபவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

5 comments:

  1. இந்த Bin Bash யில் நானும் ஒரு நிரல் எழுதி அதன் மூலம் மோடமை இயக்குகிறேன்.sudo மூலம் மட்டுமே இயங்கும் என்பதால் இந்நிரலை இயக்கும் போது அதன் password கொடுக்கவேண்டியிருக்கு,அப்படி செய்யாமல் அந்நிரலிலேயே கொடுக்கமுடியாதா?

    ReplyDelete
  2. வாருங்கள் குமார், இந்த bin bash நிரலை /etc/init.d/ அடைவினுள் காப்பி செய்துவிட்டு பின்னர்
    sudo update-rc.d xxx.sh defaults 80 என்று டெர்மினலில் தட்டச்சு செய்தால் கணினி துவங்கும் போது நிரல் வேலை செய்ய ஆரம்பிக்கும். இதை startup applicationல் சேர்க்க வேண்டாம்.இதை முயற்சி செய்துவிட்டு சொல்லுங்கள்

    ReplyDelete
  3. skumar@skumar-laptop:/$ sudo update-rc.d huawei.sh defaults 80
    update-rc.d: warning: /etc/init.d/huawei.sh missing LSB information
    update-rc.d: see
    Adding system startup for /etc/init.d/huawei.sh ...
    /etc/rc0.d/K80huawei.sh -> ../init.d/huawei.sh
    /etc/rc1.d/K80huawei.sh -> ../init.d/huawei.sh
    /etc/rc6.d/K80huawei.sh -> ../init.d/huawei.sh
    /etc/rc2.d/S80huawei.sh -> ../init.d/huawei.sh
    /etc/rc3.d/S80huawei.sh -> ../init.d/huawei.sh
    /etc/rc4.d/S80huawei.sh -> ../init.d/huawei.sh
    /etc/rc5.d/S80huawei.sh -> ../init.d/huawei.sh
    இப்படி வருது.

    ReplyDelete
  4. நீங்கள் சொல்லியபடிதான் வரும். இப்போது உங்கள் மோடம் உபுண்டு ஆரம்பிக்கும்போது வேலை செய்கிறதா. கணினி மோடத்தை எளிதில் detect செய்கிறத என்று தெரிவிக்கவும்.
    என்னுடைய கணினியில் internal modem இப்படிதான் செயல்பட வைத்தேன்.

    ReplyDelete
  5. இல்லை,திரும்பவும் டெர்மினல் மூலமாகத்தான் இயக்கவேண்டியுள்ளது.

    ReplyDelete