உபுண்டுவில் இரண்டு ஆடியோ கோப்புகளை ஒன்றன்மேல் ஒன்றாக சேர்க்க முடியும். அதாவது பேச்சையும் இசையையும் ஒன்றாக சேர்க்க முடியும். இதற்கான நிரல் தான் mixxx ஆகும். இது ubuntu software centreல் உள்ளது.
நிறுவியவுடன் Applications->sound & video->mixxx செல்ல வேண்டும்.
இதில் எந்த ஆடியோ கோப்பினையும் ஒலியின் அளவினை குறைத்துக்கொள்ளலாம்.
File->Load song (player 1) இது முதல் ஆடியோ கோப்பினை திறந்துவிடும். அதேபோல் அடுத்த ஆடியோ கோப்பினையும் திறந்து கொள்ளலாம். இதில் பல ஆடியோ கோப்புகளை அடுத்தடுத்து பிளே செய்யும் வசதியும் உள்ளது. Playlist யும் இதில் இம்போர்ட் செய்துகொள்ளமுடியும். ஒரே ஆடியோ கோப்பினையும் தொடர்ந்து இயக்க முடியும். இரண்டு டிரக்கிலேயும் தனித்தனி volume contro, balance போன்றவையும் உள்ளது.
பின்னர் options சென்றால் Record mix அழுத்தினால் ஆடியோ கோப்புகள் இணைந்து ஒரு புதிய ஆடியோ கோப்பாக மாற்றலாம். நாம் விரும்பியபடியே கோப்பின் பெயரை கொடுத்துக்கொள்ளலாம்.wav வடிவில் கோப்புகள் பதிவாகும்.
இதில் options->preference சென்றால் பல்வேறு அமைப்புகளை நாம் அமைத்துக்கொள்ளமுடியும்.
No comments:
Post a Comment