உபுண்டுவில் தொலைந்து போன மேசைகணினி அல்லது மடிகணினியை இருக்கும் இடத்தை காண உதவும் நிரல் prey. இது ஒரு opensource மென்பொருள் ஆகும்.இதை கீழ்கண்ட சுட்டியிலிருந்து தரவிறக்கி கொள்ளவேண்டும். நிறுவியவுடன் configure செய்ய வேண்டும்.
prey
இதை நிறுவியபின் applications->system tools->prey configurator செல்ல வேண்டும்.
இதில் api key மற்றும் devide key தெரிந்துகொள்ள http://preyproject.com சென்று நம்முடைய கணினியை பற்றி தகவல்கள் அளித்து பதிவு செய்துகொண்டபின் அதில் வந்துவிடும். அதை அப்படியே காப்பி செய்து பேஸ்ட் செய்யவேண்டும்.பின்னர் accept பொத்தானை அழுத்தினால் போதும்.
இதில் உள்ள அப்படியே அமைப்புகளை அமைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் உலாவியில் அட்ரச் பாரில் preyproject.com என்று தட்டச்சு செய்து அதில் நம்முடைய பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்து லாகின் செய்துகொள்ளவேண்டும். ஆரம்பத்தில் unverified ஆக இருக்கும். நாம் device key, api key கொடுத்து 20 நிமிடங்கள் காத்திருந்தால் ok வந்துவிடும்.
இதில் device key உள்ளது. பின்னர் profile சென்றால் api key இருக்கும். இதில் தொலைந்து போனதாக தகவல் தர அம்பு குறி காட்டப்பட்டுள்ள இடத்தில் கர்ஸரை வைத்து சொடுக்க கீழ்கண்ட விண்டோ விரியும்.
இதில் தேவையான அனைத்து தகவல்களையும் கொடுத்து submit பொத்தானை அழுத்த வேண்டும்.
இதில் வெப்கேம் வசதியும் உள்ளது. தொலைந்து போன மடிகணினியை இயக்குபவரின் புகைப்படத்தையும் email மூலம் நமக்கு தகவல் அளித்துவிடும்.
இப்போது நமக்கு வரும் email நாம் ஏற்கனவே பயனாளர் பெயராக கொடுத்த முகவரிக்கு வந்துவிடும்.
மேலே உள்ள படத்தில் உள்ள சுட்டியை சொடுக்கி பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கேட்கும். கொடுத்தவுடன் நமக்கு ரிப்போர்ட் கிடைத்துவிடும்.
இதில் இயக்குபவரின் ip address நமக்கு கிடைத்துவிடும். google location api மூலம் நமக்கு இடத்தை பற்றியும் தகவல் தெரிந்துவிடும். தொலைந்து போன மடிகணினியில் அலாரம் வைக்கலாம் அல்லது தகவல் அனுப்பலாம்.
உண்மைளிலே அருமையான மென்பொருள் ..அறிமுகம் செய்த வுமக்கு கோடி நன்றிகள் நண்பரே .....
ReplyDeleteதிருடர்களை பிடிக்க இந்த மென்பொருளின் பயன் பாராட்டுக்குரியது மிக்க நன்றி சார் தங்கள் இந்த இடுகை இடத்திற்கு உங்கள் அன்புடன் fosstamil .blogspot .com
ReplyDeleteநன்றி தமிழ்பிளாக், நன்றி சந்திரசேகரன்
ReplyDelete