உபுண்டுவில் google documents க்களை நாம் திருத்தியோ/சேமித்தோ nautilus file manager மூலமாக செய்ய முடியும். இதற்கு முதலில் கீழ்கண்ட கட்டளைய டெர்மினலில் கொடுக்க வேண்டும்.
sudo add-apt-repository ppa:doctormo/ppa
sudo apt-get update && sudo apt-get install gdocs-mount-gtk
பின்னர் Applications->Accessories->Google docs connection செல்ல வேண்டும்.
இப்போது கீழ்கண்ட விண்டோ வரும்.
இதில் நம்முடைய இமெயில் முகவரி மற்றும் கடவுச்சொல் கொடுக்க வேண்டும். கொடுத்தால் nautilus file manager திறந்துக்கொள்ளும்.
இதில் நமக்கு தேவையான திருத்தங்கள் செய்த பிறகு சேமித்துக்கொள்ளலாம்.இது ஒரு டிரைவ் போல டெக்ஸ்டாப்பில் mount ஆகி இருக்கும்.
இதில் open office துணைக்கொண்டு எல்லாவிதமான documents க்களையும் திருத்தம் செய்து சேமித்துக்கொள்ளலாம்.
பலே! அருமையான செய்தி. தந்தமைக்கு நன்றி
ReplyDelete