உபுண்டுவில் Places மெனுவில் சில அடைவுகள் இருப்பதை பார்த்திருப்போம். இதில் மேலும் சில அடைவுகளை சேர்க்கவோ / நீக்கவோ முடியும்.
முதலில் nautilus file manager திறந்துகொள்ளவேண்டும்.
மேலே உள்ள படத்தில் உதாரணத்திற்க்காக ஒரு அடைவை ram என்ற பெயரில் உருவாக்கியிருக்கிறேன்.
இந்த அடைவின் மீது கர்சரை வைத்து இடது கிளிக் அழுத்தியபடியே documents,music,.. என்ற அடைவுபகுதியில் விட்டுவிடவேண்டும்.
இப்போது Places மெனுவில் பார்த்தால் ram என்ற அடைவு இருக்கும்.
இந்த அடைவை நீக்க வேண்டும் என்றால் nautilus file manager திறந்து கொண்டு அதில் நீக்கப்பட வேண்டிய அடைவின் மீது கர்சரை வைத்து வலது சொடுக்க வரும் Optionல் remove தேர்ந்தெடுத்தால் நீக்கப்பட்டுவிடும்.
No comments:
Post a Comment