உபுண்டு கணினி வேகமாக இயங்க ஒரு கர்னல் பேட்ச். இதை அளித்தவர் Red Hatன் developer Lennart Poettering, கர்னலை உருவாக்கிய LinusTorvaldsக்கு எழுதிய பதிலில் தெரிவித்திருக்கிறார்.
இதை எப்படி உபுண்டுவில் பயன்படுத்துவது என்பது பற்றி பார்ப்போம்.
1.முதலில் டெர்மினலில்
sudo gedit /etc/rc.local என்ற கோப்பினை திறந்து கொள்ளவேண்டும். அதில் exit 0 என்பதற்கு மேலாக கீழ்கண்ட வரிகளை சேர்த்துவிட வேண்டும்.
mkdir -p /dev/cgroup/cpu
mount -t cgroup cgroup /dev/cgroup/cpu -o cpu
mkdir -m 0777 /dev/cgroup/cpu/user
echo "/usr/local/sbin/cgroup_clean" > /dev/cgroup/cpu/release_agent
பின்னர் சேமித்து வெளியேறிவிடவேண்டும். டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்ய வேண்டும்.
sudo chmod +x /etc/rc.local
2.Home அடைவினுள் இருக்கும் ./bashrc என்ற கோப்பினை திறந்து கொள்ளவேண்டும்.
sudo gedit ./bashrc அதில் கீழ்கண்ட வரிகளை சேர்த்துவிடவேண்டும்.
if [ "$PS1" ] ; then
mkdir -p -m 0700 /dev/cgroup/cpu/user/$$ > /dev/null 2>&1
echo $$ > /dev/cgroup/cpu/user/$$/tasks
echo "1" > /dev/cgroup/cpu/user/$$/notify_on_release
fi
3.டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்து புதிய ஒரு கோப்பினை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.
sudo gedit /usr/local/sbin/cgroup_clean இந்த கோப்பில் கீழ்கண்ட வரிகளை சேர்த்துவிடவேண்டும்.
#!/bin/sh
rmdir /dev/cgroup/cpu/$*
பின்னர் டெர்மினலில்
sudo chmod +x /usr/local/sbin/cgroup_clean என்று தட்டச்சு செய்துவிட வேண்டும்.
பின்னர் கணினியை மீளதுவங்க வேண்டும்.
இப்போது கணினி முன்பைவிட வேகமாக இயங்குவதை உணர முடியும்.
மேலும் இதனை பற்றி தெரிந்துகொள்ள இந்த சுட்டியை பார்க்கவும்.
இதை செய்துமுடித்தவுடன் எனக்கு நெருப்பு நரி, தண்டர்பேர்டு, ஒபன் ஆபிஸ் போன்ற மென்பொருட்கள் வேகமாக இயங்குவதாக தெரிகிறது.
sudo chmod +x /etc/rc.local
ReplyDeleteஇந்த command க்கு command not found என்று reply வருகிறது . இதற்கு என்ன செய்ய வேண்டும் ? நன்றி
வாருங்கள் சிவா. நீங்கள் என்ன லினக்ஸ் வைத்திருக்கிறீர்கள் என்று தெரியப்படுத்தவும். sudo மற்றும் chmod உபுண்டுவில் defaultஆக உள்ள கட்டளைகள்
ReplyDeleteThanks sir. my ubuntu 10.10 is fast now.and also i feel sound is clearly
ReplyDeleteநன்றி, இப்போது கணிணியின்வேகம்கூடியிருப்பதாக எனக்குதெரிகிறது.
ReplyDeleteநன்றி, இப்போது கணிணியின்வேகம்கூடியிருப்பதாக எனக்குதெரிகிறது.
ReplyDeleteஎன்னுடையது உபுண்டு 10.10 .
ReplyDelete