Pages

Saturday, January 8, 2011

உபுண்டு மற்றும் மற்ற லினக்ஸ் உபயோகிப்பாளர்களுக்கும் பொது மக்களுக்கும் ஒரு வேண்டுகோள்

உபுண்டு மற்றும் மற்ற லினக்ஸ் உபயோகிப்பாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரு வேண்டுகோள்.

All India Council for Technical Education (AICTE) (A statutory body of the Government of India) என்பது இந்தியவில் engineering college மற்றும் polytechnic college ஆரம்பிக்க மற்றும் அனுமதிக்கப்பட்ட காலத்தை நீட்டிக்கவும் அனுமதி வழங்கும் ஒரு அரசு அமைப்பாகும். தொழில்நுட்ப படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் இதன் தளமான http://aicte-india.org னை பார்வையிட்டு அதன் படி எந்த கல்லூரி அனுமதி பெற்றுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்த அமைப்பு அறிவித்துள்ள ஒரு அறிவிப்பின்படி அனைத்து தொழில்நுட்பக்கல்லூரிகளும் அதன் இணைய தளத்தில் தம்முடைய கல்லூரிகளை பதிவு செய்தபின்னர் அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இது மாணவர்களுக்கு ஏற்ற ஒரு அறிவிப்பாகும். எனவே ஒவ்வொரு கல்லூரியும் அதன் இணையத்தளத்தை திறந்து அதில் பதிவு செய்ய வேண்டும்.

அப்படி தளத்தினை திறந்தால் முதலில் பதிவு செய்ய அதில் சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை படித்துக்கொள்ளவேண்டும். அப்படி படிக்குபோதுதான் சில உண்மைகள் நமக்கு அதாவது லினக்ஸ் ஆர்வலர்களுக்கு தெரிய வருகிறது.

பதிவு செய்வதற்கு கீழ்கண்ட கணினி அமைப்புகள் தேவை என்று சொல்லப்படுள்ளது.

1.windows xp service pack 2 with internet explorer 6.0 with service pack2 or internet explorer 7.
2.Windows vista
3.Sun Java Runtime Environment (JRE) 1.5.0 or above is a prerequisite
4.Office 2007


மேற்கண்டவற்றை கணினியில் நிறுவினால் மட்டுமே aicte தளம் வேலை செய்கிறது.



இப்போது பதிவு செய்ய அம்பு குறி காட்டப்பட்டுள்ள இடத்தில் கிளிக் செய்தால் தளம் திறக்கப்பட்டு அதிலும் எந்த வேலையும் லினக்ஸ் உபயோகிப்பாளர்களால் செய்ய முடிவதில்லை.


ஒரு அரசு அமைப்பில் எந்த ஒஸ்ஸிலும் வேலை செய்யலாம் என்று இருக்க வேண்டாமா, இதில் பதிவு செய்வதற்கு எல்லாவற்றையும் விலைகொடுத்து வாங்கி அதன்பிறகுதான் நிறுவ வேண்டும். லினக்ஸிலோ அல்லது நெருப்பு நரி உலாவியிலோ இந்த தளம் வேலை செய்வது கிடையாது.

எனவே லினக்ஸ் ஆர்வலார்கள்தான் இது போன்ற அரசு துறைகளில் open source ஐ பரவ முயற்சி செய்ய வேண்டும். இன்னும் இது போல் எவ்வளவு இருக்கிறதோ தெரியவில்ல. இப்படி வைத்துக்கொண்டு சீனக்காரன் ஊடுறுவினான் என்று சொன்னால் பிரயோசனம் இல்லை.

7 comments:

  1. //இப்படி வைத்துக்கொண்டு சீனக்காரன் ஊடுறுவினான் என்று சொன்னால் பிரயோசனம் இல்லை//

    நெத்தியடி சார்,

    தொழிநுட்பத்துறையில் இந்தியாவின் கொள்கை வெட்டவெளிச்சமாக தெரிகிறது(இதையும் நாம் எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளலாம்)

    இதுபோன்ற செயல்களை மக்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வு அடைய செய்யும் உங்களைப் போன்றோர்கள். லினக்ஸ் பயனாளர்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறீர்கள்.

    ReplyDelete
  2. அந்த இத்துப்போன சோம்பேறிப் பயல்களுக்கு எப்போ ஊத்திக்கொள்ளும் என்று சொல்ல முடியாத விண்டோஸ் மட்டும்தான் தெரியும் போல! லினக்ஸ் இயக்கம் அளவுக்கு புத்தி இல்லாத பயல்கள். நடக்க சோம்பேறித்தனப் பட்டவன் சித்தப்பன் வீட்டில் பெண் கட்டினானாம் என்ற கதை இவனுங்களுக்குச் சரியாக இருக்கும்.

    ReplyDelete
  3. முகப்பு பக்கத்தில் இணைப்பும் கொடுத்து விட்டேன் சார்.

    ReplyDelete
  4. சுல்லுன்னு இருக்கு உங்க பதிவு

    ReplyDelete
  5. நன்றி இரா.கதிர்வேல்
    நன்றி ஜெயதேவ் தாஸ்
    நன்றி பக்காடெக்கிஸ்

    ReplyDelete
  6. Hi arulmozhi

    Sorry now I cant type in tamil.

    the same problem is there in aiims.org site also.
    It is also government site.

    This site is for medical council for higher study

    Rajarajan

    ReplyDelete
  7. வாருங்கள் வனம் அரசு துறை நிறுவனமான bsnl லும் அப்படிதான் உள்ளது.

    ReplyDelete