உபுண்டுவில் பலவேறு லினக்ஸ் ஒஸ்களை ஒரே சிடியில் காப்பி செய்து அவற்றை bootble cd ஆக செய்ய முடியும். இதற்கு உதவும் ஸ்கிரிப்ட் தான் multicd.sh ஆகும். இந்த ஸ்கிரிப்டை தரவிறக்கி ஒரு அடைவினுள் காப்பி செய்து கொள்ளவேண்டும். நான் இந்த அடைவினை மேசைமீது காப்பி செய்து வைத்துள்ளேன்.
இந்த அடைவினுள் நாம் விரும்பும் ஒஸ்க்களை காப்பி செய்து கொள்ளவேண்டும். ஒஸ்களை இந்த சுட்டியில் கண்டவாறு பெயர் மாற்றம் செய்துகொள்ள வேண்டும்.
இங்கு நான் எடுத்துகொண்டு இருப்பது உபுண்டு 10.10, லினக்ஸ் மின்ட் மற்றும் டினிகோர் எனப்படும் ஒஸ்க்கள். இதில் multicd.sh என்ற தரவிறக்கப்பட்ட ஸ்கிரிப்ட் இருக்க வேண்டும்.
இப்போது டெர்மினலில்
arulmozhi@arulmozhi-945GZM-S2:~$ cd Desktop
arulmozhi@arulmozhi-945GZM-S2:~/Desktop$ cd ubuntu1004
இதில் என்னுடைய அடைவின் பெயர் ubuntu1004.
தரவிறக்கப்பட்ட ஸ்கிரிப்டை இயங்கு நிலையில் வைக்க
sudo chmod +x multicd.sh என்று தட்டச்சு செய்ய வேண்டும். பின்னர் டெர்மினலில்
sudo ./multicd.sh என்று தட்டச்சு செய்தால் iso கோப்பு உருவாகிவிடும். இதனை ஒரு சிடியில் காப்பி செய்து கணினியில் பூட் செய்தால் multiboot சிடியாக துவங்கும்.
மேலே உள்ள படத்தில் அடைவினுள் iso கோப்பு உருவாகி இருப்பதை பார்க்கலாம்.
நன்றி சார்.
ReplyDeleteஇன்னும் தெளிவாக விளக்க முடியுமா சார்.
linuxsaravananlive@gmail.com
வாருங்கள் சரவணன். உங்கள் சந்தேகத்தை தெரிவிக்கவும்.
ReplyDeleteநான் இதை முயற்சி செய்தேன் இயலவில்லை அதான் கூடுதல் தகவல் தந்தால் பயனுள்ளதாக இருக்கும் சார்..
ReplyDeleteநான் இதை முயற்சி செய்தேன் இயலவில்லை அதான் கூடுதல் தகவல் தந்தால் பயனுள்ளதாக இருக்கும் சார்..
ReplyDeleteஇன்னும் தெளிவாக விளக்க முடியுமா சார்.
ReplyDeleteplease send your response to sksamy1977@gmail.com
ReplyDeleteவாருங்கள் சிவதாசன் உங்களுக்கு எந்த இடத்தில் சந்தேகம் என்பதை கூறவும்.
ReplyDelete