Pages

Tuesday, February 1, 2011

உபுண்டுவில் weather indicator

உபுண்டுவில் இன்றைய காலநிலையை அறிவதற்க்கு weather indicator என்ற நிரல் உதவுகிறது. இந்த நிரலை PPA மூலம் நிறுவிக்கொள்ளலாம்.

டெர்மினலில் கீழ்கண்ட வரிகளை தட்டச்சு செய்ய வேண்டும்.

sudo add-apt-repository ppa:weather-indicator-team/ppa
sudo apt-get update
sudo apt-get install indicator-weather

இந்த நிரலை நிறுவியவுடன் System->Preferences->weather indicator preferences சென்று settingsகளை அமைத்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த நிரல் டாப் பேனலில் ஐகானாக இருக்கும்.


இந்த ஐகான மீது கர்சரை வைத்து இடது சொடுக்கியவுடன் வரும் விண்டோவில் preferences சென்று பல்வேறு இடங்களின் பெயர்களை சேர்த்துக்கொள்ளலாம்.



பின்னர் நாம் சேர்த்த இடங்களை நம் விருப்பம் போல் தெரிவு செய்யலாம். இந்த ஐகான் மீது இடது சொடுக்கினால் வரும் விண்டோவில் பல்வேறு நகரத்தின் பெயர்கள் அதாவது நாம் சேர்த்த நகரத்தின் பெயர்கள் வரும். அவற்றில் ஒன்றின தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.



பின்னர் forecast சென்றால் நாம் தேர்ந்தெடுத்த நகரத்தின் நான்கு நாட்களின் காலநிலை தெரியும்.



டாப் பேனலில் உள்ள ஐகான்கள் நாம் தேர்ந்தெடுக்கும் நகரத்தின் பருவநிலைக்கேற்ப வடிவம் மாறும்.

3 comments:

  1. your work is very nice. keep it up for the good articles. thanks

    ReplyDelete
  2. நன்றி பொன்மலர்

    ReplyDelete
  3. மேல் பலகத்தில் வலச்சொடுக்கிட்டு "Add to panel"ல் weatherஐ தேர்வு செய்தும் வானிலை தகவல்களை பெரலாம். ஆனால் அதில் அம்சங்கல் இவ்வளவு இல்லை.

    ReplyDelete