உபுண்டுவில் default உள்ள அடைவுகளான downloads, music,videos போன்றவற்றை நம் விருப்பம் போல் மாற்றிக்கொள்ள முடியும்.
உதாரணமாக இணையத்திலிருந்து ஏதேனும் கோப்பினை தரவிறக்கும்போது Downloads என்ற அடைவினுள் சேமிக்கப்பட்டுவிடும். அவ்வாறில்லாமல் நம் விருப்பம் போல் அடைவினை உருவாக்கி அதில் சேமிக்க முடியும்.
Home அடைவினுள் ஒரு அடைவாக Down என்ற அடைவினை உருவாக்கினேன். இதனை default ஆக மாற்ற கீழ்கண்ட வழிமுறையினை பின்பற்றலாம்.

மேற்கண்ட படத்தில் அடைவு உருவாகி இருப்பதை காணலாம். மேலும் view->show hidden files சென்றால் அதில் மறைக்கப்பட்ட அடைவுகள் தெரிவதை காணலாம். அதில் .conig அடைவிற்கு சென்று அதில் user-dirs.dirs என்ற கோப்பினை திறந்துகொள்ள வேண்டும்.

கோப்பினை திறந்தால்

அதில் கீழ்கண்டவாறு வரிகள் இருக்கும்.
XDG_DESKTOP_DIR="$HOME/Desktop"
XDG_DOWNLOAD_DIR="$HOME/Downloads"
XDG_TEMPLATES_DIR="$HOME/Templates"
XDG_PUBLICSHARE_DIR="$HOME/Public"
XDG_DOCUMENTS_DIR="$HOME/Documents"
XDG_MUSIC_DIR="$HOME/Music"
XDG_PICTURES_DIR="$HOME/Pictures"
XDG_VIDEOS_DIR="$HOME/Videos"
இதில்
XDG_DOWNLOAD_DIR="$HOME/Downloads" என்பதற்கு பதிலாக
XDG_DOWNLOAD_DIR="$HOME/Down" என்று மாற்றிவிட்டால் போதும். தரவிறக்கப்படும் கோப்புகள் இந்த அடைவினுள் சேமிக்கப்படும்.

இதைப்போல் மற்ற அடைவுகளான video, pictures போன்ற அடைவுகளையும் நம் விருப்பம் போல் மாற்றிக்கொள்ளலாம்.