
முதலில் Home அடைவினுள் நாம் சேர்க்க விரும்பும் அடைவை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அல்லது ஏற்கனவே இருக்கும் அடைவனாலும் இருக்கலாம்.

மேலே உள்ள படத்தில் இருக்கும் அடைவான Public என்ற அடைவிவை எடுத்துக்கொள்வோம். இந்த அடைவினை Places மெனுவில் சேர்ப்பது பற்றிப்பார்ப்போம்.
முதலில் டெர்மினலில்
gksudo gedit .gtk-bookmarks
என்ற கட்டளையை கொடுத்து home அடைவினுள் இருக்கும் .gtk-bookmarks என்ற கோப்பினை திறந்துகொள்ளவேண்டும். அதில் கீழ்கண்ட வரியை சேர்த்துவிடவேண்டும்.
file:///home/user name/Public

இப்போது Places மெனுவில் Public என்ற அடைவு வந்திருப்பதை பார்க்கலாம்.

gtk-bookmarks என்ற கோப்பானது home அடைவினுள் மறைக்கப்பட்ட கோப்பாக இருக்கும்.