Pages

Wednesday, November 11, 2009

உபுண்டு 9.10, 9.04, vista,windows 7 ஒரு ஒப்பீடு

உபுண்டு 9.10,9.04, vista, windows 7 booting race ஒரு youtube படம்.

Tuesday, November 10, 2009

உபுன்டு 9.10 நிறுவிய பின்

உபுன்டு 9.10 நிறுவிய பின்

உபுண்டு 9.10 நிறுவிய பின் வேண்டிய நிரல்களும் video & audio codecகளை நிறுவ script_ubuntu_9.10_karmic_koala.sh தரவிறக்கி டெர்மினலில் கீழ்கண்டவாறு தட்டச்சு செய்து இயக்கினால் அனைத்து முக்கியமான நிரல்களும் நிறுவப்பட்டுவிடும்.

இந்த script புதியதாக உபுண்டு 9.10 நிறுவினால் மட்டுமே செயல்படுத்தப்பட்டுவிடும். upgrade செய்தால் ஏற்கனவே இந்த நிரல்கள் நிறுவியிருந்தால் தேவையில்லை.

இந்த ஸ்கிரிப்ட் கீழ்கண்டவற்றை சரிப்பார்கிறது.

1.முக்கிய resipositories களை software sourceஇல் சேர்க்கிறது.
2.முக்கியமான புதிய upgrade களை தரவிறக்கி நிறுவிகிறது.
3.codecs, plugings (Java & flash)களை நிறுவுகிறது.
4. rar,zip போன்ற archieve நிரல்களை நிறுவலாம்.
5.MPlayer நிறுவலாம்.
6.இந்த ஸ்கிரிப்ட் central/western europe (windows 1250) நிறுவி விடும். அதை நீக்க
64,69 to 75 ஆகிய வரிகளை disable செய்துவிடவும்.
7. empathyஐ நீக்கிவிட்டு pidiginஐ நிறுவ

செயற்படுத்தும் முறை டெர்மினலில்

# sudo sh script_ubuntu_9.10_karmic_koala.sh என்று தட்டச்சு செய்தால் போதும்.

Monday, November 9, 2009

உபுண்டு 9.10ல் IPv6 disable செய்வது எப்படி

உபுண்டு 9.10ல் IPv6ஐ disable செய்வது இரு வழிகளில் செய்யமுடியும்.

1.எளிமையான வழி இது firefox மூலம் செய்யமுடியும்.
firefoxன் address barல் about:config என்று தட்டச்சு செய்தால் வரும் விண்டோவில் search boxல்
network.dns.disableIPv6 என தட்டச்சு செய்யவேண்டும். பின்னர் அதன் valueவை 'True' ஆக மாற்ற வேண்டும்.

2.சற்று கடினமான வழி. மிகவும் கவனமாக செய்யவேண்டும். இல்லையன்றால் கணினி boot ஆகாது.
#sudo gedit /etc/default/grub என்ற கோப்பினை திறந்து கொள்ளவேண்டும். பின்னர் அந்த கோப்பில்
GRUB_CMDLINE_LINUX என்ற வரியை தேடி கண்டுபிடித்து அந்த வரியை கீழ்கண்டவாறு மாற்றம் செய்யவேண்டும்.

GRUB_CMDLINE_LINUX="ipv6.disable=1" அந்த கோப்பினை சேமித்துகொள்ளவேண்டும்.

இதன் பின்னர் டெர்மினலில்

#sudo update-grub2 என்று தட்டச்சு செய்து grub2 வை update செய்யவேண்டும்.

grub2 இல்லாவிட்டால்

#sudo update-grub என்று தட்டச்சு செய்யவேண்டும். பின்னர் கணினியை restart செய்யவேண்டும்.

Sunday, November 8, 2009

உபுண்டு vlc ல் vcd

vlc முந்தைய பதிப்புகளில் vcd பிரச்னை இருந்தது. ஆனால் 1.0.3 ல் vcd நன்றாக வேலை செய்கிறது. டெர்மினலில்
#use/bin/vlc vcd:// என்று டைப் செய்தால் vcd வேலை செய்கிறது.


இதை vlc ஐ திறந்தும் செய்யலாம்.
Applications->Sound & Video->VLC media player vlc->Media->Open disc

இதில் svcd/vcd ஐ தேர்ந்தெடுத்து play பொத்தானை அழுத்தினால் vcd நன்றாக ஒட ஆரம்பித்தது.

Saturday, November 7, 2009

உபுண்டுவின் வேகம்

உபுண்டு 9.10ன் வேகம் ஆரம்பிக்கும்போது




உபுண்டு shutdown ஆகும்போது


உபுன்டுவில் தானாகவே shutdown,restart ஆவதற்க்கு

உபுண்டுவில் தானாகவே shutdown,restart ஆவதற்கு

Applications->Ubuntu software centreக்கு சென்று GShutdown என்ற நிரலை தேர்ந்தெடுத்து நிறுவிக்கொள்ளவேண்டும்.

Applications->Accessories->GSutdown தேர்வு செய்தால்.
இதில் நமக்கு வேண்டிய தேதி நேரம் ஆகியவற்றை மாற்றினால் கணினி தானாகவே shudown ஆகும். இங்கு select a time க்கு கீழே
At date & time, After delay, Now என்ற மூன்று ஆப்ஷன்கள் வரும். இதில் ஏதவது ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
பின்னர் நேரத்தை சரியாக வைத்துக்கொள்ளவேண்டும்.
மாதம் வருடம் சரிசெய்யலாம். <> <2009> என்று இருக்கும். இதில் '<' குறியானாது முந்தைய மாதம் வருடத்திற்கு செல்லும். '>' இது பின்னால் வரும் மாதம் வருடம் செல்லும்.

இதற்க்கு கீழே Actual time நேரத்தை தற்போதைய நேரம் காட்டகூடியது.
இதற்கு கீழே மூன்று ஆப்ஷன்கள் வரும். அதில் ஒன்றை நாம் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
Turn off computer, Restart Computer, End current session என்று இருக்கும்.பின்னர் start பொத்தானை அழுத்தினால் நிரல் வேலை செய்ய துவங்கி விடும்.

Edit->Preferenceல்

இதில் recommand செய்யப்பட்ட இடத்தில் செலக்ட் செய்ய வேண்டும். பின்னர் Specify the method mannually தேர்ந்தெடுத்தால்(தேவைப்பட்டால்) இல்லையேல் இந்த ஆப்ஷன் தேவையில்லை.
இதில் desktop->gnome, kde,xfc
Display manager->GDM, KDM இந்த இரண்டு ஆப்ஷன்களில் நம் கணினியில் gnome, display managerக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து கொள்ளவேண்டும்.

Misc

இந்த விண்டோவில் tray icon desktopல் தோன்ற வைக்கலாம்.
Show system tray icon->if always எப்பொழுதும் பேனலில் இருக்கும்.
ifactive-> நிரல் இயங்கும் போது பேனலில் இருக்கும்.

Notifications
எத்தனை நிமிடத்திற்கு முன்னால் warning message வர வேண்டும் என்பதை செட் செய்திடலாம்.
Test-> சோதனை செய்வதற்கு.
Custamise notications time இங்கு தான் நேரத்தை செட் செய்யவேண்டும்.

Friday, November 6, 2009

உபுண்டு 9.10ல் desktop

உபுண்டுவில் 9.10 desktop எப்படியிருக்கிறது என்பது பற்றி ஒரு வீடியோ