Pages

Friday, November 27, 2009

உபுண்டுவில் winff gui video converter

உபுண்டுவில் winff என்ற நிரல் gui வீடியோ மாற்றியாக பயன்படுத்தக்கூடிய ஒரு மென்பொருள். இந்த நிரலை நிறுவுவதற்கு

Applications->ubuntu software center

இதில் பல்வேறு வீடியோ மற்றும் ஆடியோ க்களின் வடிவங்களை மாற்றலாம்.


எந்தவிதமான codecக்களின் துணையுமின்றி மாற்றலாம். இதில்
add பொத்தனை அழுத்தி வீடியோ கோப்புக்களை அல்லது ஆடியோ கோப்புகளை இணைக்கலாம். remove பொத்தனை அழுத்தினால் சேர்க்கப்பட்ட கோப்புகளை நீக்கலாம்.
play பொத்தனை அழுத்தினால் வீடியோ கோப்புகளை பார்க்கலாம்.
convert அழுத்தினால் வீடியோ நாம் விரும்புக் வடிவில் மாற்றமடையும்.




output detailsன் கீழ்
conver to வில் நாம் விரும்பும் formatஐ தேர்ந்தேடுக்கலாம்.
device presetல் ntsc அல்லது pal தேர்ந்தேடுக்கலாம்.
output folder ல் நாம் விரும்பும் இடத்தில் கோப்புகளை செமிக்கலாம்.

options பொத்தனை அழுத்தினால் additional option வரும் இதில் நாம் விரும்பும் வீடியோ அல்லது ஆடியோ க்களை bitrate, framesize, framerate நம் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.
பின்னர்

Edit->Preference



இங்கு default folder நம் விருப்பதிற்கேற்ப மாற்றி அமைக்கலாம். பின்னர் linux சென்றால் அங்கு முக்கியாமன நிரலை இயக்ககூடிய கோப்புகள் அமைந்திருக்கும்.


நம்முடைய கைபேசிக்கேன வடிவங்களையும் இந்த நிரலை பயன்படுத்தி மாற்றிக்கோள்ளலாம்.

Tuesday, November 24, 2009

உபுண்டுவில் sound converter

உபுண்டுவில் sound converter என்பது நம்மிடம் இருக்கும் mp3 பாடல்களை ogg formatக்கு மாற்ரிக் கொள்ளலாம். mp3 என்பது விலை கொடுத்து வாங்ககூடியது. ஆனால் ogg format அப்படியல்ல. சுதந்திரமான கட்டற்ற format.

இந்த நிரலை நிறுவுவதற்க்கு ubuntu software centerக்கு சென்று நிறுவிக்கொள்ளலாம். பின்னர்


Applications->Sound & video->Sound converter தெர்வு செய்தால் நிரல் வேலை செய்ய துவங்கும்.


இதில் add file பொத்தனை அழுத்தி mp3 கோப்புகளையோ அல்லது ogg கோப்பையோ தேர்வு செய்யலாம்.


பின்னர் convert பொத்தனை அழுத்தினால் கோப்பு மாறதுவங்கும்.

இதில் mp3,ogg,flv & wmv ஆகிய கோப்புகளிடையே மாற்ரிக்கொள்ளலாம். mp3 கோப்பாக மாறுவதற்க்கு lame plugin தேவை.இது ஒரு எளிமையான மென்பொருள். lame plugin நிறுவுவதற்கு நிரலிலேயே வழி இருக்கிறது.

Sunday, November 22, 2009

உபுண்டு 9.10 dual panel nautilus file manager

உபுண்டுவில் dual panel nautilus file managerஐ நிறுவலாம்.



இதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

வழிமுறை 1:

மூன்று .deb கோப்புகளை தரவிறக்க வேண்டும்.

1.https://launchpad.net/%7Eberndth/+archive/ppa/+files/libnautilus-extension1_2.28.1-0ubuntu3%7Ehb1%7Ekarmic1_i386.deb
2.nautilus-data_2.28.1-0ubuntu3%7Ehb1%7Ekarmic1_all.deb
3.nautilus_2.28.1-0ubuntu3%7Ehb1%7Ekarmic1_i386.deb

மேற்கண்ட மூன்று நிரல்களையும் பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவேண்டும். பின்னர் டெர்மினலில்

killall nautilus && nautilus & என்று தட்டச்சு செய்யவேண்டும்.பின்னர் F3 பொத்தனை அழுத்தவேண்டும்.

வழிமுறை 2.

software source listல் ppa சேர்த்தும் நிறுவலாம்.கீழ்கண்ட சுட்டியில் விளக்கம் பெறலாம்.

இங்கே அழுத்தவும்

டெர்மினலில் sudo apt-get update என்று தட்டச்சு செய்து update செய்ய வேண்டும்.




Saturday, November 21, 2009

உபுண்டு 9.10ல் bluetooth வழியாக screen locking/unlocking

உபுண்டுவில் ஏதேனும் வேலை செய்துகொண்டிருக்கும்போது அவசரகாரணமாக சிறிது நேரம் வேறு வேலை பார்க்கவேண்டியிருந்தால் shoutdown அல்லது hibernate செய்துவிட்டு போவோம். ஆனால் இந்த நிரல் மூலம் தானாகவே screen lock ஆகிவிடுமாறு அமைக்கலாம்.


Applications->ubuntu software center சென்று Blueproximity என்ற நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்







இந்த நிரலை நிறுவியவுடன் நம்முடைய கைபேசியிலுள்ள bluetooth ஐ ஆன் செய்து கணினியிலுள்ள bluetooth ற்க்கு இணைப்பை ஏற்படுத்தவேண்டும்.

பின்னர் Applications->Accessories->Blueproximity

இதில் bluetooth deviceஐ scan for devices மூலம் தேடினால் நம்முடைய கைபேசியிலுள்ள bluetooth device கணினியில் வந்துவிடும்.

use selected device தேர்வு செய்துகொள்ளவேண்டும். பின்னர் proximity details ஐ தேர்வு செய்யவேண்டும்.



இதில் locki ng/unlockingல் தூரம் மற்றும் நேரம் ஆகியவற்றை தெர்வு செய்யவேண்டும்.Measure atm தானாகவே செலக்ட் செய்துகொள்ளும்.

பின்னர் locking சென்று கட்டளைகளை இடவேண்டும்.


இங்கு logging கீழ் syslogல் local7க்கு பதிலாக 'user' என்பதனை தெர்வு செய்துகொள்ளவேண்டும். பின்னர் file என்பதில் டிக் செய்துவிட்டு நாம் விரும்பும் கோப்பின் பெயரை கொடுத்தால் log பதிவாகும். கணினியில் bluetooth இல்லையென்றால் ஒரு usb bluetooth dongle வாங்கிகூட பயன்படுத்தலாம்.
நாம் proximity detailsல் குறிப்பிட்ட தூரத்திற்க்கு மேல் கைபேசியிடன் சென்று விட்டால் screen lock ஆகிவிடும்.

Thursday, November 19, 2009

உபுண்டு 9.10 gnome display manager 2.28லிருந்து 2.20 க்கு கீழிறக்குதல்

உபுண்டு 9.10ல் gnome display manager (gdm) 2.28ஆக இருக்கும். இதை 2.20 ஆக தரம் இறக்கலாம். காரணம் 2.28 இன்னுமும் முழுமையடவில்லை.

குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் கணியின் இயங்கு தளத்தை பாதித்துவிடும் அபாயம் இருப்பதால் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

முதலில் டெர்மினலில்

#sudo /etc/init.d/gdm stop என்று தட்டச்சு செய்தால் கணினி login செய்யசொல்லும். user name and password கொடுத்து login செய்யவேண்டும்.

மீண்டும் gdm கொண்டுவர டெர்மினலில்

#sudo gdm என்று தட்டச்சு செய்தால் பழைய நிலை வந்துவிடும்.

gdm 2.20 நிறுவ

#sudo apt-get install gdm-2.20 என்று தட்டச்சு செய்தால் நிரல் நிறுவப்பட்டுவிடும்.

இதனால் 2.28லிருந்து 2.20ஆக குறைந்து விடும். பின்னர் gdm.conf கோப்பை சரிசெய்ய கீழ்கண்ட கட்டளையிடவேண்டும்.

sudo sed ’s|X11R6/||’ gdm.conf >/tmp/gdm.conf

sudo mv /tmp/gdm.conf . இங்கு .conf அடுத்து '.' வைக்கவேண்டும்.

மீண்டும் gdm தொடங்க

#sudo gdm தட்டச்சு செய்யவேண்டும்.

Wednesday, November 18, 2009

உபுண்டு 9.10ல் bsc beesoft commander) கோப்புகளை கையாளும் நிரல்

உபுண்டு 9.10ல் bsc (beesoft commander) கோப்புகளை கையாளும் நிரல்

உபுண்டு 9.10 ல் bsc (beesoft commander) கோப்புகளை கையாளுவதற்கான நிரல். இது gui வகை நிரல் ஆகும். இரண்டு panel களில் கோப்புகள் தெரியும். இதனால் கோப்புகளை கையாளுவது எளிதாகிறது.
  • காப்பி,பேஸ்ட், நகர்த்துதல், பெயர் மாற்றுதல், கோப்புகளை தனியாகவோ மொத்தமாகவோ அல்லது folder ஆகவோ
  • கோப்பின் தன்மையை மாற்றலாம்.
  • கோப்பில் உள்ளதை எடிட் செய்யலாம்.பார்வையிடலாம்.
இந்த நிரலை நிறுவ

Applications->ubuntu software center சென்று நிறுவிக்கொள்ளலாம்.

நிறுவியபின்

Applications->Accessories->bsc சென்று நிரலை இயக்கலாம்.

இதில் system,operations,language,help என்று மெனு உள்ளது. இதை பயன்படுத்தி நம்முடைய கோப்புகளை எளிதில் கையாள முடியும்.

Tuesday, November 17, 2009

உபுண்டு 9.10க்கு மேம்படுத்தும் போது விஎல்சி சரிசெய்ய

உபுண்டு 9.10 மேம்படுத்தும் போது vlc சிலசமயங்களில் சரிவர வேலை செய்யாது. அப்போது கீழ்கண்ட சில வழிமுறைகளை கையாண்டு சரிசெய்யலாம்.

வழிமுறை 1.

டேர்மினலில் கீழ்கண்ட கட்டளையிட்டால் சரிசெய்யலாம்.

#sudo apt-get install libavcodec52

வழிமுறை 2.

ubuntu-restricted-extras நிறுவப்பட்டுள்ளதா என்று உறுதி செய்துகொள்ளவேண்டும். இல்லையேனில்

#sudo apt-get install ubuntu-restricted-extras என்று டேர்மினலில் தட்டச்சு செய்து நிறுவி கொள்ளவேண்டும்.

வழிமுறை 3.

mediubunt resipo வை செயலிழக்க செய்யப்பட்டதை உறுதி செய்து கொள்ளவேண்டும். பின்னர் டெர்மினலில்
#sudo apt-get remove --purge ffmpeg gstreamer0.10-ffmpeg gstreamer0.10-fluendo-mp3 gstreamer0.10-plugins-ugly liba52-0.7.4 libavcodec52 libavformat52 libavutil49 libdvdnav4 libdvdread4 libgsm1 libid3tag0 libmad0 libmpeg2-4 libpostproc51 libschroedinger-1.0-0 libsidplay1 libswscale0 libtwolame0 ubuntu-restricted-extras libavcodec52 libavformat52 libswscale0 libvlc2 libvlccore2 vlc vlc-data vlc-nox vlc-plugin-pulse
என்று தட்டச்சு செய்து எல்லவகையான codeக்களையும் அழித்துவிடவும்.

பின்னர் டெர்மினலில்

#sudo apt-get install ubuntu-desktop நிறுவி கொள்ளவேண்டும். ஏனெனில் இந்த நிரல் அழிக்கப்பட்டுஇருக்கும்.

பின்னர் கணினியை மீளதுவக்கி டெர்மினலில்

#sudo apt-get install ubuntu-restricted-extras என்று நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும்.

வழிமுறை 4.

mediubuntu repo வை செயலிழக்க செய்யவேண்டும்.
#sudo apt-get --purge remove libx264-67 என்று தட்டச்சு செய்து குறிப்பிட்ட கோப்பை அழித்து மீண்டும் அதே கோப்பை நிறுவிக்கொள்ளவேண்டும்.

வழிமுறை 5

பின்வரும் கட்டளையை டெர்மினலில் தட்டச்சு செய்யவேண்டும்.
#sudo apt-get remove smplayer
#sudo apt-get remove mplayer
#sudo apt-get remove libx264-67 –purge
#sudo apt-get install libx264-67
#sudo apt-get install smplayer
#sudo apt-get install mplayer
#sudo apt-get install vlc

மேற்கண்ட முறைகளினால் விஎல்சி வேலை செய்ய துவங்கும்.