Pages

Sunday, January 24, 2010

உபுண்டுவில் numeric lock கணினி ஆரம்பிக்கும்போது செயல்பட வைக்க

உபுண்டுவில் கணினி ஆரம்பிக்கும்போது numeric lock செய்வதற்கு கீழ்கண்ட வழிமுறைகளை பார்க்கலாம்.
logon செய்யும்போது கடவுச்சொல் எண்களாக அமைத்திருந்தால் இது மிகவும் உதவியாக இருக்கும். சிலசமயங்களில் numeric lock ஆகாமல் இருந்து மறந்துபோய் எண்களை அழுத்தினால் கடவுச்சொல் தவறு என்று வரும். இதை தவிர்க்க முதலில் டெர்மினலில்

#sudo apt-get install numlockx என்ற நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும். இது software center மற்றும் synaptic package managerலும் கிடைக்கும்.

பின்னர் நிறுவியவுடன் டெர்மினலில்

#sudo gedit /etc/gdm/Init/Default என்று கட்டளையிட கோப்பு திறக்கும்.

இதில் exit 0 என்பதை கண்டுபிடித்து

அதன் மேல் கீழ்கண்ட வரிகளை செர்த்துவிட வேண்டும்.

if [ -x /usr/bin/numlockx ]; then
/usr/bin/numlockx on
fi




செமித்து வேளியேற மீண்டும் கணினி ஆரம்பிக்கும்போது numeric lock on ஆகி இருக்கும்.

Saturday, January 23, 2010

உபுண்டுவில் எழுத்துருக்களை நிறுவுவதற்கு

உபுண்டுவில் எழுத்துருக்களை நிறுவுவதற்கான வழிமுறைகள்

விண்டோவினுடைய எழுத்துருக்களை நிறுவுவதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.

விண்டோவில் எழுத்துரு கோப்புகள் விண்டோவில் fonts என்ற அடைவினுள் இருக்கும். உபுண்டுவில் இருந்தபடியே அந்த அடைவை அணுகி உபுண்டு desktop காப்பி செய்யவேண்டும். அதாவது அடைவின் பெயர் wfonts என்பதாக இருக்கட்டும். உதாரணத்திற்க்காக அவரவர்கள் விருப்பபடி பெயர் வைத்துக் கொள்ளலாம்.

தினமலர், தினதந்தி,தினமணி போன்ற நாளிதழ்களை படிப்பதற்க்கு அந்தெந்த நாளிதழ்களின் வலைத்தளத்திலே எழுத்துரு தரவிறக்க சொல்லி இருப்பார்கள் அதையும் தரவிரக்கி இந்த எழுத்து அனைத்தையும் ஏதேனும் ஒரு அடைவினுள் அதாவது tfonts என்பதாக desktopல் இருக்கட்டும்.

இப்போது இரண்டு அடைவு இருக்கும். பின்னர் டெர்மினலில்

arulmozhi@arulmozhi-desktop:~$ cd Desktop
arulmozhi@arulmozhi-desktop:~/Desktop$

பின்னர்

sudo mv wfonts /usr/share/fonts/truetype/ என்று தட்டச்சு செய்தால் கடவுச் சொல் கேட்கும். அதை அளித்தால் wfonts என்ற அடைவானது /use/share/fonts/truetype/ என்ற உபுண்டுவினுடைய அடைவிற்குள் சென்றுவிடும். இதே போல் tfonts என்ற அடைவையும் செய்யவேண்டும்.

மீண்டும் டெர்மினலுக்கு வந்து

#sudo fc-cache -f -v /usr/share/fonts/truetype/ என்று தட்டச்சு செய்தால் போதும். எழுத்துருக்கள் நிறுவப்பட்டுவிடும். open office போன்றவற்றிலும் வந்துவிடும். ஏதேனும் ஒரு தமிழ் எழுத்துருவை நிறுவ வேண்டியிருந்தாலும் இதே முறையை பின்பற்றலாம். ஒரு எழுத்துரு இருந்தால் அடைவு தேவையில்லை. அப்படியே mv கட்டளை கொடுத்து சேர்த்துக்கொள்ளலாம். இதற்கான கட்டளை

#sudo mv xxx.ttf /usr/share/fonts/truetype/tfonts/ என்று கட்டளை கொடுத்தால் எழுத்துரு அடைவினுள் சென்றுவிடும். இதன் பின் fc-cache கட்டளை கொடுக்கவேண்டும்.


Thursday, January 21, 2010

உபுண்டுவில் nautilusல் விண்டோஸ் partition திறக்கும் போது passward disable செய்ய

உபுண்டுவில் nautilus file brows செய்யும்போது விண்டோஸ் partitionகளை திறக்கும்போது authitication password கேட்கும். இதை disable செய்வற்கு கீழ்கண்ட வழிகளை பின்பற்றலாம்.



முதலில் டெர்மினலில் கீழ்கண்ட வரிகளை தட்டச்சு செய்யவேண்டும்.

gksudo gedit /usr/share/polkit-1/actions/org.freedesktop.devicekit.disks.policy




மேற்கண்ட கோப்பில்

allow_active auth_admin_keep allow_active என்ற வரிகளை கண்டுபிடித்து கீழ்கண்டவாறு மாற்றிக்கொள்ளலாம்.

allow_active yes allow_active

பின்னர் செமித்து வெளியேறவேண்டும்.

Wednesday, January 20, 2010

உபுண்டுவில் mplayer பயன்படுத்தி dvdயிலிருந்து ஆடியோ பிரித்தல்

உபுண்டுவில் mplayer ஐ பயன்படுத்தி dvdயிலிருந்து அதாவது vob கோப்புகளிலிருந்து ஆடியோவை மட்டும் தனியாக பிரிக்கலாம்.

ஒரு அடைவினுள் vob கோப்புகளை செமித்து கொள்ளவேண்டும்.


பின்னர் இதே அடைவினுள் சென்று கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்யவேண்டும்.

arulmozhi@arulmozhi-desktop:~$ cd Desktop
arulmozhi@arulmozhi-desktop:~/Desktop$ cd vob
arulmozhi@arulmozhi-desktop:~/Desktop/vob$

பின்னர் டெர்மினலில்

cat VTS_02_1.VOB VTS_02_2.VOB > MYVOB.VOB என்று vob கோப்புகளை ஒன்றாக சேர்த்துக்கொள்ளவேண்டும். இப்போது myvob.vob என்ற ஒன்றிணைக்கப்பட்ட கோப்பு உருவாகியிருக்கும்.




பின்னர் டெர்மினலில்

mplayer MYVOB.VOB -aid ${AID} -dumpaudio -dumpfile my_audio.ac3 என்பது கட்டளையின் வடிவமாகும். இதில் ${AID} என்பற்கு பதிலாக ஆடியோ சேனலின் எண்ணை போட வேண்டும். அதாவது இதன் range 128 லிருந்து 159 க்குள் இருக்க வேண்டும்.

mplayer MYVOB.VOB -aid 128 -dumpaudio -dumpfile my_audio.ac3

இப்போது my_audio.ac3 என்ற வடிவில் ஒரு ஆடியோ கோப்பு உருவாகியிருப்பதை காணலாம்.


Tuesday, January 19, 2010

உபுண்டுவில் dvd rip

உபுண்டுவில் dvd வீடியோ கோப்பினை வட்டிலிருந்து தனியாக ogv வடிவத்தில் பிரித்தெடுக்க நிரல் thoggen என்ற நிரல் பயன்படுகிறது. இது ubuntu software centreலிருந்து நிறுவி பயன்படுத்தலாம்.



நிறுவிய பின் Applications->sound & video->thoggen dvd ripper சென்றால்



dvd வட்டினை trayயில் வைத்தவுடன்

இதில் நமக்கு வேண்டதவற்றில் tik markஐ எடுத்துவிடவேண்டும்.


இதில் output file என்ற இடத்தில் நாம் விரும்பும் கோப்பின் பெயரை தரலாம்.ok அழுத்தியவுடன் dvd தனியாக பிரிய ஆரம்பிக்கும்.

நிரல் இயங்கி முடிந்தவுடன் ogv வடிவிலான கோப்பு கிடைக்கும்.

Sunday, January 17, 2010

உபுண்டுவில் backup restore செய்ய ஒரு எளிய script

உபுண்டுவில் backup/restore செய்ய ஒரு எளிய scriptஐ பார்ப்போம். இது நம்முடைய desktopல் உள்ள பலவற்றை backup எடுத்துகொண்டும் பின்னர் நமக்கு தேவைப்பட்ட நேரத்தில் restore செய்ய உதவுகிறது.

gnome themes, gnome panel settings, backgrounds and settings, compuz, bluetooth manager,update notifier, evalution settings,gnome terminal settings போன்ற பல settingsகளை backup/restore செய்ய உதவுகிறது. இதை நிறுவ முதலில் கீழ்கண்ட சுட்டியிலிருந்து script தரவிறக்கி கொள்ளவேண்டும்.

yourgnome desktopலோ அல்லது home அடைவினுளோ இந்த scriptஐ செமித்து கொள்ளவேண்டும். முதலில் desktop ல் செமித்து கொள்ளவதாக கொள்வோம்.

arulmozhi@arulmozhi-desktop:~$ cd Desktop
arulmozhi@arulmozhi-desktop:~/Desktop$

#sudo chmod +x yourgnome1.sh என்று தட்டச்சு செய்து scriptஐ இயங்ககூடிய scriptஆக மாற்றிகொள்ளவேண்டும். பின்னர் டெர்மினலில்

#sudo ./yourgnome1.sh என்று தட்டச்சு செய்தால் நிரல் இயங்க தொடங்கும்.


இதில் நாம் செய்யப்போகும் வேலைக்கு ஏற்றார் போல் 1 அல்லது 2 தட்டச்சு செய்யவேண்டும். backup செய்வதாக இருந்தால் 1 தேர்ந்தெடுக்கலாம்.


நாம் எந்த அடைவை backup எடுக்க வேண்டுமோ அதை path: நேராக மேலே கண்ட படத்தில்
உள்ளது போல் தட்டச்சு செய்யவேண்டும்.


பின்னர் நிரல் இயங்கி மேலே உள்ள படத்தில் உள்ளதுபோல் வந்தால் filename: என்ற இடத்தில் நமக்கு விருப்பம்போல் ஒரு பெயரை தட்டச்சு செய்யவேண்டும்.


நிரல் முடிந்தவுடன் home அடைவினுள் சென்று செமித்துவிடும்.

பின்னர் நமக்கு தேவையான சமயத்தில் 2 தட்டச்சு செய்து restor செய்துகொள்ளலாம்.

Saturday, January 16, 2010

உபுண்டுவில் multi terminal

உபுண்டுவில் Applications->Accessories->Terminal க்கு சென்றால் ஒரு டெர்மினல்தான் திறக்கும். பல டெர்மினல் ஒரே விண்டொவில் பல வேலைகளை செய்வதற்கு software centreலேயே வழி இருக்கிறது. முதலில் டெர்மினலில்

#sudo apt-get install terminator என்று தட்டச்சு செய்து நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும். இந்த நிரலானது

Applications->Accessories->Terminator சென்று இயங்க செய்யலாம்.


நிரலை செயற்படுத்தும் போது



விண்டொவின் மீது கர்சரை வைத்து mouse ல் இடது சொடுக்கினால் வரும் optionல் split vertically, split horizontally, open tab என்ற option வரும்.

இதில் split vertically என்று தேர்ந்தெடுத்தால்

மேற்கண்ட விண்டொவில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று split horizontally என்று தேர்ந்தெடுத்தால்


இந்த நான்கு பகுதியிலும் நான்கு விதமான வேலைகளை செய்யலாம்.



இப்போது open tab தேர்வு செய்தால் firefox tab போல செயல்படும்.

இதில் edit profile தேர்வு செய்தால்

இதில் colour, background image போன்றவை அமைத்துக்கொள்ளலாம்.