Pages

Sunday, March 21, 2010

உபுண்டுவில் ipod

புண்டுவில் ipod இணைத்தபோது அது ஒரு storage டிவைஸாக ஏற்றுக்கொண்டது. அழகாக mount ஆகி அதில் இருக்கும் அடைவுகளை காண்பித்தது.


இந்த device Transcend MP850 ver1.42 4GB கொள்ளளவு உடையது. desktopஇல் இதன் icon.



இதன் file system



ஆனால் இதன் வீடியோ format mtv கோப்பினை மட்டும் உபுண்டுவில் கொண்டுவர முடியவில்லை. ஆடியோ நன்றாக வேலை செய்கிறது.

அனைத்து கோப்புகளையும் data cable உதவியுடன் காப்பி செய்ய முடிகிறது.

Saturday, March 20, 2010

உபுண்டுவில் say time script

புண்டுவில் இன்றைய தேதி மற்றும் நேரத்தை speakerல் கேட்க முடியும். அதற்கேன ஒரு script.

முதலில் டெர்மினலில்

sudo gedit /bin/saytime என்ற ஒரு காலியான கோப்பினை திறந்து அதில் கீழ்கண்ட வரிகளை காப்பி செய்துவிட வேண்டும்.

#!/bin/sh

echo "Today is: `date +%d` `date +%B` `date +%Y` and now the time is: `date +%k` and `date +%M` minutes" | espeak

பின்னர் இந்த script இயங்ககூடிய நிலையில் வைக்க டெர்மினலில்

sudo chmod +x /bin/saytime என்று தட்டச்சு செய்ய வேண்டும். பின்னர் டெர்மினலில்

saytime என்று தட்டச்சு செய்தால் ஆங்கிலத்தில் இன்றைய தேதி மற்றும் நேரம் கேட்கும்.


இதற்கு முதலில் espeak என்ற நிரலை synaptic package manager மூலமாக நிறுவியிருக்க வேண்டும்.

Friday, March 19, 2010

உபுண்டுவில் font install செய்ய ஒரு script

உபுண்டுவில் font அதாவது எழுத்துரு எப்படி நிறுவுவது என்று பார்ப்போம்.முதலில் டெர்மினலில் ஒரு காலியான கோப்பினை திறந்துகொள்ளவேண்டும்.

sudo gedit ~/.gnome2/nautilus-scripts/fontint என்று கட்டளையிட வேண்டும். பின்னர் கீழ்கண்ட வரிகளை காப்பி செய்துவிடவும். இந்த script இயங்ககூடிய நிலையில் வைக்க டெர்மினலில்

sudo chmod +xt ~/.gnome2/nautilus-scripts/fontint என்று தட்டச்சு செய்யவேண்டும்.

#!/bin/bash
#
# Autore: Mosconi Marco (brus46)
# Licenza: GPL 2 or later
#
gksu mkdir /usr/share/fonts/truetype/myfonts
for arg do
files=`echo "$arg" | sed 's/ /\\ /g'`
gksu cp "${files}" /usr/share/fonts/truetype/myfonts/
zenity --title=FontInstaller --info --text="${files}"
done

gksu fc-cache -f -v

zenity --title=FontInstaller --info --text="Fonts installed"

exit 0

பின்னர் ஒரு எழுத்துரு கோப்பின் மீது வைத்து இடது சொடுக்கலில் script->fontint என்று தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது எழுத்துரு நிறுவப்பட்டுவிடும்.




மேலே படத்தில் இருப்பது தினதந்தி நாளிதழின் எழுத்துரு ஆகும். இதை எப்படி நிறுவுவது என்று பார்ப்போம். இதன் மீது இடது சொடுக்கலில் script->fontint என்று தேர்ந்தெடுத்தால் எழுத்துரு நிறுவப்பட்டு இருப்பதை பார்க்கலாம்.



இங்கு ok அழுத்தவேண்டும்.


இப்போது எழுத்துறு நிறுவப்பட்டு விடும். இப்போது எழுத்துரு அடைவினை பார்ப்போம்.



இப்போது நாளிதழை பார்ப்போம்.

Thursday, March 18, 2010

உபுண்டுவில் set as wall paper

உபுண்டுவில் desktopல் ஒரு படத்தை wallpaper ஆக கொண்டுவருவதற்கு இடது சொடுக்கி change background என்பதனை தேர்வு செய்வோம். இதில் பல்வேறு படங்களை இனணத்துகொள்ளவேண்டும். அப்படியில்லாமல் எந்த அடைவில் படத்த பார்க்கிறோமொ அதை அப்படியே wallpaper ஆக கொண்டுவரமுடியும்.



முதலில் டெர்மினலில்

sudo gedit ~/.gnome2/nautilus-scripts/setwall.sh என்று தட்டச்சு செய்து ஒரு காலியான கோப்பினை திறந்துகொள்ள வேண்டும். அதில் கீழ்கண்ட வரிகளை காப்பி செய்துவிடவும்.

#!/bin/bash

##Written by Akshay Srinivasan. You're welcome to modify this script. This script requires Zenity to work as intended.
FILE=`echo -n $NAUTILUS_SCRIPT_SELECTED_FILE_PATHS`

if [ -n `file "$FILE" | grep image` ]
then
zenity --notification --text="$FILE is not an image."
else
gconftool-2 -t string -s /desktop/gnome/background/picture_filename "$FILE"
fi

exit

பின்னர் இந்த scriptஐ இயங்ககூடிய நிலையில் வைக்க

sudo chmod +x ~/.gnome2/nautilus-scripts/setwall.sh என்று தட்டச்சு செய்தால் போதும். இப்போது ஏதாவது ஒரு பட கோப்பின் மீது இடது சொடுக்கினால் வரும் விண்டோவில் script ஐ தேர்ந்தெடுத்து பின்னர் setwall.sh ஐ தேர்ந்தெடுத்தால் படம் desktopஇல் wallpaperஆக வந்துவிடும்.

Tuesday, March 16, 2010

உபுண்டுவில் uget download manager

உபுண்டுவில் uget download manager என்பது கோப்புகளை இணையத்திலிருந்து தரவிறக்க உதவும் ஒரு மென்பொருளாகும்.

இது ஒரு கட்டட்ற்ற மென்பொருள் ஆகும். இதனை நிறுவ getdeb.netன் repositoryஐ இந்த சுட்டியிலிருந்து தரவிறக்கி நிறுவிகொள்ளவேண்டும். அதற்கு டெர்மினலில்

sudo dpkg -i getdeb-repository_0.1-1~getdeb1_all.deb என்று கட்டளையிட வேண்டும்.பின்னர் uget என்ற சுட்டிக்கு செல்ல வேண்டும்.


மேற்கண்ட படத்தில் install now என்ற பொத்தனை அழுத்தினால் நிரல் நிறுவ ஆரம்பிக்கும்.



இதில் ok அழுத்தியவுடன் நிரல் நிறுவப்பட்டுவிடும். பின்னர்

applications->internet->uget என்று தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் icon top panelல் இருக்கும்.



இதை கிளிக் செய்தவுடன்


இந்த நிரலின் சிறப்பு என்னவென்றால் தரவிறக்க வேண்டிய சுட்டியை காப்பி செய்ததும் இந்த நிரல் வேலை செய்ய துவங்கும்.


ok அழுத்தியவுடன் தரவிறக்க ஆரம்பிக்கும். top panel இருக்கும் icon ல் இடது சொடுக்கினால் வரும் optionல் newfrom clipboard என்ற optionல் இருந்து புதிய தரவிறக்க வேண்டிய கோப்பினை தேர்ந்தெடுக்கலாம்.

Monday, March 15, 2010

உபுண்டுவில் நிறுவப்பட்ட நிரல்களை காண சில கட்டளைகள்

உபுண்டுவில் நிறுவப்பட்டுள்ள நிரல்களை காண டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்யவேண்டும்.

dpkg --get-selections



இதையே ஒரு டெக்ஸ்ட் கோப்பில் சேமிக்க

dpkg --get-selections > installed_packages.txt என்று தட்டச்சு செய்யவேண்டும்.

installed-packages.txt என்ற கோப்பு home அடைவினுள் செமிக்கப்படும்.

நிறுவப்பட்டுள்ள நிரலின் தொடர்புடைய கோப்புகள் எங்கு இருக்கிறது என்பதை காண டெர்மினலில்

dpkg -L package_name என்று தட்டச்சு செய்யவேண்டும். அதாவது

dpkg -L vlc என்று தட்டச்சு செய்தால் vlc தொடர்புடைய கோப்புகள் எங்கு இருக்கிறது என்பதை காட்டும்.



இப்போது vlc யின் தொடர்புடைய கோப்புகளை தேட டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்யவேண்டும்.

dpkg -S vlc இதன் வெளிப்பாடு


இதில் எதை வேண்டுமானால் தேர்வு செய்யலாம்.

Sunday, March 14, 2010

உபுண்டுவில் mouse pointer

உபுண்டுவில் நாம் வேலை செய்துகொண்டு இருக்கும்போது mouse pointer சிலசமயங்களில் காணாமல் போய்விடுவடும். அதாவது mouse pointer எங்கே என்று தெரியமல் இருக்கும். அதற்கு நாம் மவுஸை பலமுறை அசைத்து கண்டுபிடிபோம். அப்படியில்லாமல் ஒரே ஒரு கீ அழுத்துவதன் மூலம் கண்டுபிடிக்கலாம்.

System->Preferences->Assistive Technologies செல்ல வேண்டும்.


வரும் விண்டோவில் mouse accessibility தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் general tabஐ தேர்வு செய்யவேண்டும்.


இதில் locate pointer என்பதன் கீழ் இருக்கும் show position of pointer when the control key is pressed என்பதன் முன்னால் இருக்கும் பெட்டியில் டிக் மார்க் செய்யவேண்டும்.

இப்போது mouse point இல்லை என்று தேடாமல் control keyஐ அழுத்துவதன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.


மேலே உள்ள படத்தில் mouse pointer ஐ சுற்றி வட்டமாக கோடுகள் தெரிவதை காணலாம்.