Pages

Saturday, April 24, 2010

உபுண்டு vs windows time fixing

புண்டு நிறுவும்போது dual boot ஆக நிறுவியிருப்போம். அதாவது விண்டோஸ் உடன் நிறுவியிருப்போம்.

இந்த இரண்டு operating system த்திறகான நேரம் சில நேரங்களில் மாறுப்பட்டு இருக்கலாம். இதை சரிசெய்ய டெர்மினலில்

sudo gedit /etc/default/rcS என்று தட்டச்சு செய்து கோப்பினை திறந்து கொள்ள வேண்டும்.


இந்த கோப்பில் UTC=yes என்ற வரியை கண்டுபிடித்து அதில் yes என்று இருப்பதை no என்று மாற்றிக்கொண்டால் இந்த இரண்டு os களுக்கு இடையேயான நேரம் வித்தியாசம் இல்லாமல் இருக்கும்.

உபுண்டு 10.04 rc

புண்டு 10.04 ஆர்சி தற்சமயம் வெளி வந்து இருக்கிறது. வரும் 29 ஏப்ரலில் முழு பதிப்பும் வெளிவந்துவிடும். அதன் சில காட்சிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தரவிறக்க

உபுண்டு 10.04 ஆர்சி என்ற சுட்டிக்கு செல்ல வேண்டும்.

நெருப்பு நரியில் google பக்கம்



ஒபன் ஆபிஸ் 3.2 இதில் oracle பெயர் வருவதை காணலாம்.


ubuntu software centre



update செய்யும் போது


நெருப்பு நரி 3.6.3


nautilus file manager


இதில் minimum,maximise,close பொத்தான்கள் இடதுபுறத்தில் உள்ளது.

உபுண்டுவில் kernel update

புண்டுவில் kernel update நாமே செய்துகொள்ள முடியும். இதற்கான நிரல் தான் kernel check. இதை தரவிறக்கி நம்முடைய கணினியில் நிறுவிக்கொள்ளவேண்டும்.

பின்னர் applications->system tools->kernel check தேர்வு செய்தால் நிரல் வேலை செய்ய துவங்கும்.

இந்த நிரல் kernel update தானே கண்டறிந்து தரவிறக்கி மற்றும் நிறுவிக்கொள்கிறது.இது தன் செயல்பாட்டை முடித்துக்கொள்ள 2-4 மணி நேரம் ஆகிறது.



இங்கு forward பொத்தானை அழுத்த வேண்டும்.




இதில் இரண்டு வழிமுறைகள் தரப்பட்டுள்ளன. இதில் நாம் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.



kernel update நிறுவ ஆரம்பிக்கிறது.


kernel versionஐ காண applications->system tools->sys info சென்றால் காணலாம்.

Friday, April 23, 2010

உபுண்டுவில் unp archieve extractor

புண்டுவில் எந்த ஒரு கோப்புகளையும் எந்த வடிவில் சுருக்கி இருந்தாலும் அதை விரிவாக்கம் செய்வதற்கான ஒரு நிரல் unp ஆகும். அதாவது rar,zip,tar போன்ற எந்த வடிவமாக இருந்தாலும் இந்த நிரலை பயன்படுத்தி டெர்மினலில் விரிவாக்கம் செய்திடலாம்.

இதை நிறுவுவதற்கு டெர்மினலில்

sudo apt-get install unp என்று தட்டச்சு செய்து நிறுவிக்கொள்ளவேண்டும்.


இதன் syntax

unp *.tar.gz, unp *.tar.bz, unp *.rpm, unp *.deb, unp *.zip, unp *.rar என்பதாகும். நமக்கு tar,zip,rar போன்றவற்றின் கட்டளைகள் மறந்து போய்விட்டால் இந்த கட்டளை நமக்கு உதவும்.

Wednesday, April 21, 2010

உபுண்டுவில் storage device manager

உபுண்டுவில் storage deviceகளை கையாள்வதற்கேன்றே ஒரு நிரல் தான் storage device manager என்பதாகும். இது ubuntu software centerல் உள்ளது.


இந்த நிரலை நிறுவியப்பின் system->administration->storage device manager செல்ல வேண்டும். இந்த நிரலால் உபுண்டு மற்றும் விண்டோஸ் partition களையும் usb device களையும் mount/unmount செய்ய முடியும்.
கணினி ஆரம்பிக்கும் போதே mount செய்ய வைக்க முடியும். அதாவது /etc/fstab கோப்பில் திருத்தம் செய்ய முடியும். எளிதில் mount/unmount செய்ய முடிகிறது. ஒவ்வொரு partitionக்கும் தனிதனியாக configuration செய்ய முடியும்.


இங்கு ok அழுத்தினால் mount ஆகிவிடும்.பின்னர் unmount பொத்தானை அழுத்தினால் unmount ஆகிவிடும்.


இங்கு set defaults என்ற பொத்தானை அழுத்தினால் கணினி ஆரம்பிக்கும் போதே partition mount ஆகிவிடும். /etc/fstab கோப்பில் திருத்தம் செய்துவிடும்.



இங்கு dynamic configuration tools சென்றால் ஒவ்வொரு partition களுக்கும் தனிதனியாக configuration செய்யலாம்.




இங்கு sdb என்பது usb deviceஐ குறிக்கும்.

Tuesday, April 20, 2010

உபுண்டுவில் duplicate files/directories நீக்க

புண்டுவில் duplicate files/directories நீக்குவதற்கு ஒரு எளிய நிரல் fslint. இதை நிறுவதற்கு டெர்மினலில்

sudo apt-get install fslint என்று தட்டச்சு செய்து நிருவிக்கொள்ளவேண்டும்.

இதன் பயன்கள்

1.duplicate கோப்புகளை கண்டுபிடிக்க
2.நிறுவப்பட்ட நிரல்களை காண
3.temp கோப்புகளை காண/அழிக்க
4.empty அடைவுகளை கண்டுபிடிக்க

இந்த நிரலை இயக்க Applications->system tools->fslint என்று தேர்ந்தெடுக்க வேண்டும்.இதன் படங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.







Monday, April 19, 2010

உபுண்டுவில் sudo password time-out

புண்டுவில் ஏதேனும் ஒரு கோப்பினை திறக்கும் போது sudo என்று ஒரு கட்டளை பயபடுகிறது. அதாவது sudo gedit xxxx.txt என்பதாக இருக்கும். அப்படி கட்டளையிடும் போது கடவுச்சொல் கேட்கும். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் பயன்படுத்தும் போது கடவுச்சொல் கேட்காது. அதாவது sudo கட்டளை கடவுச்சொல்லை நினிவில் வைத்திருக்கும். இந்த sudo கட்டளையின் நினைவில் வைத்திருக்கும் நேரத்தை மாற்றி அமைக்கலாம்.

முதலில் டெர்மினலில்

sudo visudo என்று கட்டளையிட்டால் கீழ்காணும் விண்டோ திறக்கும்.


இதில் Defaults env_reset என்ற வரியில் கீழ்கண்டவாறு மாற்றம் செய்யவேண்டும்.

Defaults env_reset , timestamp_timeout=x

இங்கு x என்பது நாம் விரும்பும் நேர அளவு நிமிடங்களில் குறிக்கும். 0 என்று குறித்தால் கடவுச்சொல் உடனடியாக கேட்கும். 1 என்று குறித்தால் ஒரு நிமிடம் கழித்து sudo கட்டளையிட்டால் கடவுச்சொல் கேட்கும்.



பின்னர் contrl+x என்று அழுத்தி yes என்று கொடுத்தால் கோப்பு சேமிக்கப்பட்டுவிடும். பின்னர் sudo கட்டளையிட்டால் நாம் கொடுத்துள்ள நேரம் வரை கடவுச்சொல் கேட்காது.