Pages

Sunday, May 16, 2010

உபுண்டுவில் slideshow via Photofilestrip

உபுண்டுவில் slideshow உருவாக்குவதற்கேன்றே உள்ள ஒரு நிரல் photofilmstrip ஆகும். இதை பயன்படுத்தி மூன்று அடுக்களில் slideshow உருவாக்கிவிடலாம். முதலில் கீழ்கண்ட சுட்டியிலிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளவேண்டும்.

Photofilmstrip

Applications->Sound & Video->PhotoFilmStrip தேர்ந்தேடுக்க வேண்டும்.



இதில் '+' அடையாளத்தை அழுத்த எந்த படங்கள் வேண்டுமோ அதை தேர்வு செய்யலாம்.


பின்னர் டிக் குறியீட்டை அழுத்த வரும் விண்டோவில் பல அமைப்புகள் நம் விருப்பம் போல் அமைத்துக்கொள்ளலாம். ஆடியோ கோப்பினையும் இணைத்துக்கொள்ளலாம்.




பின்னர் start பொத்தானை அழுத்த வீடியோ கோப்பு அதாவது slideshow கோப்பு உருவாகிவிடும்.

Saturday, May 15, 2010

உபுண்டுவில் LBP2900 canon அச்சு இயந்திரம்

உபுண்டுவில் canon LBP 2900 அச்சு இயந்திரத்தை நிறுவுவதைப்பற்றி பார்ப்போம்.

முதலில் கீழ்கண்ட சுட்டியிலிருந்து driver கோப்புகளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவேண்டும். இது tar கோப்பாக இருக்கும். தரவிறக்கி கணினியில் விரித்துக்கொள்ளவேண்டும்.



பின்னர் டெர்மினலில் ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு கட்டளையாக கொடுக்க வேண்டும்.

sudo /etc/init.d/cups restart

sudo /usr/sbin/ccpdadmin -p LBP2900 -o /dev/usb/lp0

ls /usr/share/cups/model/ |grep CNCUPS

/usr/sbin/lpadmin -p LBP2900 -m CNCUPSLBP2900CAPTK.ppd -v ccp:/var/ccpd/fifo0 -E

இப்போது system->administration->printing சென்றால் lbp2900 அச்சு இயந்திரம் நிறுவப்பட்டு இருப்பதை பார்க்கலாம்.



பின்னர் இதை கணினி ஆரம்பிக்கும் போதே ஆரம்பிக்க

sudo /etc/init.d/ccpd start

sudo update-rc.d ccpd defaults 20

இப்போது அச்சு இயந்திரம் தயாரகிவிடும்.

Friday, May 14, 2010

உபுண்டுவில் இரண்டு தேதிக்களுக்கு நடுவே உள்ள நாட்களை கணக்கிட

உபுண்டுவில் கொடுக்கப்பட்ட இரண்டு தேதிகளுக்கு நடுவே உள்ள நாட்களை கணக்கிட ஒரு ஸ்கிரிப்ட். இத கீழ்கண்ட சுட்டியிலிருந்து தரவிறக்கி கொள்ளவேண்டும்.

betdat.sh

பின்னர் இந்த ஸ்கிரிப்டை இயங்குநிலையில் வைக்க டெர்மினலில்

sudo chmod +x betdat.sh என்று தட்டச்சு செய்யவேண்டும். பின்னர்

உதாரணமாக 01/10/2010 மற்றும் 31/10/2010 என்ற இரண்டு தேதிகளை எடுத்துக்கொள்வோம்.

நாட்களை கணக்கிட

./betdat.sh 10/1/2010 10/31/2010 என்று தட்டச்சு செய்தால் இதன் விடை 30 என்று திரையில் வரும்.



Thursday, May 13, 2010

உபுண்டுவில் கொடுக்கப்பட்ட எண்களில் பெரிய எண்னை கண்டுபிடிக்க

உபுண்டுவில் கொடுக்கப்பட்ட மூன்று எண்களில் எந்த எண் பெரிய எண் என்பதை காண ஒரு எளிய ஸ்கிரிப்ட்.

முதலில் டெர்மினலில்

sudo gedit laint.sh என்று தட்டச்சு செய்து ஒரு காலியான டெக்ஸ்ட் கோப்பினை திறந்துகொள்ளவேண்டும். பின்னர் கீழ்கண்ட வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்தவுடன் செமித்து வெளியேற வேண்டும்.


பின்னர் இந்த ஸ்கிரிப்டை இயங்கு நிலையில் வைக்க டெர்மினலில்

sudo chmod +x laint.sh

இந்த நிரலை இயக்க

./laint.sh 90 60 40 என்று தட்டச்சு செய்தால் மூன்று எண்களில் பெரிய எண்ணை காட்டிகொடுக்கும்.

Wednesday, May 12, 2010

உபுண்டு மிக எளிதாக பொத்தான்களை வலதுபக்கம் வைத்தல்

உபுண்டு maximise,minimum,close பொத்தான்களை மிக எளிதாக இடது பக்கமிருந்து வலது பக்கம் மாற்ற ஒரு எளிய வழி.

இந்த சுட்டியிலிருந்து deb கோப்பினை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவேண்டும்.

பின்னர்

Applications->Accessories->Metacity Windows buttons என்பதனை தேர்ந்தெடுத்து நம் விருப்பம் போல் மாற்றிக்கொள்ளலாம்.




மேலே உள்ள படத்தில் இடது வலது பக்கத்திற்கேன்று தனித்தனியாக பொத்தான்கள் அமைப்பதற்கு வழி உள்ளது.

Tuesday, May 11, 2010

உபுண்டு nautilus location bar to text mode

உபுண்டுவில் nautilux address barஐ GUI modeலிருந்து text modeற்கு மாற்றுவதை பார்ப்போம். nautilusல் location barல் அடைவுகள் தனிதனியாக தெரியும்.


அதையே கீழ்கண்டவாறு மாற்ற முடியும்.


இதற்கு டெர்மினலில்

gconftool-2 --type=Boolean --set /apps/nautilus/preferences/always_use_location_entry true

என்று தட்டச்சு செய்ய வேண்டும்.


மீண்டும் பழைய மாதிரியே வேண்டுமென்றால் true பதிலாக false கொடுக்க வேண்டும்.

gconftool-2 --type=Boolean --set /apps/nautilus/preferences/always_use_location_entry false

இதையே வேறுவிதமாக செய்யலாம். alt+f2 அழுத்தினால் வரும் விண்டோவில் gcont-editor என்று தட்டச்சு செய்து run பொத்தானை அழுத்தவேண்டும்.



config editor திரையில் வந்தவுடன்


apps->nautilus->preference தேர்ந்தெடுத்து இடது பக்க விண்டோவில் இருக்கும் always_use_location_entryன் எதிரே டிக் செய்துவிட வேண்டும்.


இந்த அமைப்பு தேவையில்லையென்றால் டிக் செய்ததை எடுத்துவிட வேண்டும்.

Monday, May 10, 2010

உபுண்டு 1004ல் messaging menuவில் thunderbird

உபுண்டு top panelல் chat,setup mail போன்ற ஆப்ஷனுக்கேன்று ஒரு indicator இருப்பதை காணலாம்.இந்த indicator உபுண்டுவில் இயல்பாகவே அமைந்துள்ள evolution mail client ற்க்காக அமைந்துள்ளது. இந்த மெனுவில் mozilla thunderbird mail/news indicator வரவழைக்கலாம்.


முதலில் டெர்மினலில் கீழ்கண்டவாறு தட்டச்சு செய்து thunderbird.desktop என்ற கோப்பு இருக்கிறத என்று உறுதி செய்துகொள்ளவேண்டும்.

sudo gedit /usr/share/applications/thunderbird.desktop




thunderbird நிறுவியிருந்தால் மேலே படத்தில் உள்ளவாறு வரும்.இந்த கோப்பு /usr/share/applications/ என்ற அடைவினுள் இருக்கும்.

பின்னர் டெர்மினலில்

sudo gedit /usr/share/indicators/messages/applications/thunderbird என்ற கோப்பினை உருவாக்கிகொள்ளவேண்டும். அதில் கீழ்கண்ட வரியை சேர்த்து செமித்து கொள்ளவேண்டும்.

/usr/share/applications/thunderbird.desktop





இப்போது top panelல் உள்ள iconல் இடது சொடுக்கினால் வரிசையாக ஆப்ஷன்கள் thunderbird சேர்ந்து வருவதை பார்க்கலாம்.