Pages

Thursday, June 3, 2010

உபுண்டுவில் pendrive format - disk utility வழியாக

உபுண்டுவில் pendrive format செய்வது டெர்மினலில் கட்டளை கொடுத்து செய்யமுடிந்தது. ஆனால் disk utility என்ற நிரல் இதற்கு உதவுகிறது.

முதலில் pendrive அதற்க்கான இடத்தில் சொருகினால் mount ஆகி அதற்கான icon திரையில் வந்துவிடும்.


இந்த iconல் கர்சரை வைத்து வலது சொடுக்க வரும் விண்டோவில் format தேர்ந்தெடுக்க வேண்டும்.


இதில் type உள்ள optionகள் லினக்ஸ் மட்டும் உள்ளது. அதனால் disk utility தேர்ந்தெடுக்க வேண்டும்.


மேலே உள்ள விண்டோவில் pendriveஐ பற்றி எல்லாவிதமான தகவல்களும் இருக்கும். Format செய்வதற்கு முன் unmount volume சொடுக்கி pendriveவை unmount செய்ய வேண்டும். .

இப்போது format volume அழுத்தினால் கீழ்கண்ட விண்டோ வரும்.இதில் typeல் எந்த வகை format மற்றும் பெயர் கொடுத்திக்கொள்ளலாம்.



இதில் format பொத்தானை அழுத்தினால் பார்மட் ஆக தொடங்கும்



இதிலும் format அழுத்த வேண்டும்.


Format ஆன பின்னர் mount volume அழுத்த pendrive பற்றிய எல்லா தகவல்களும் கிடைக்கும்.


Format செய்தபிறகு பெயர் மாற்ற வேண்டுமென்று விரும்பினால் Edit file system label தேர்ந்தெடுக்கலாம்.


இதில் apply அழுத்தினால் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும். பின்னர் edit partition அழுத்தினால் partition வகையை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.


இந்த நிரலில் hardiskஐ கூட format செய்துவிட முடியும். எனவே பயன்படுத்துமுன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

Tuesday, June 1, 2010

உபுண்டுவில் notificationosd நம் விருப்பம் போல் அமைத்துகொள்ள

உபுண்டுவில் notification osd ஐ நம் விருப்பம் போல் பின்புல நிறத்தையும், எழுத்து நிறத்தையும் மாற்ற முடியும்.Default ஆக கருப்பு நிறம் இருக்கும்.




கீழ்கண்ட PPA க்களை நம்முடைய கணினியில் software source ல் சேர்த்துக்கொள்ளவேண்டும். டெர்மினலில்

sudo add-apt-repository ppa:leolik/leolik
sudo add-apt-repository ppa:amandeepgrewal/notifyosdconfig

பின்னர்

sudo apt-get update && sudo apt-get upgrade என்று தட்டச்சு செய்து கணினியை update செய்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் டெர்மினலில்
sudo apt-get install notifyosdconfig என்று தட்டச்சு செய்து notifyosdconfig நிரலை நிறுவிக்கொள்ளவேண்டும். இந்த நிரலை இயக்க

Applications->accessories->notifyosd configuration செல்ல வேண்டும். இதில்தான் பின்புல நிறம் மற்றும் எழுத்து நிறம் மாற்றவேண்டும்.



இதில் background colour ஐ மாற்றிக்கொள்ளவேண்டும். பின்னர் apply அழுத்தவேண்டும்.



இதில் text title colour நிறத்தை மாற்றிக்கொண்டு apply அழுத்தவேண்டும். இப்போது notifyosdயின் பின்புல நிறம் மற்றும் எழுத்து நிறம் மாறியிருக்கும்.


இதில் File option சென்றால் இந்த தீமை செமித்துக்கொள்ளமுடியும். இது தேவையில்லை பழைய நிறமே போதும் என்றால் reset பொத்தான் இருக்கிறது.

உபுண்டுவில் multige download manager

உபுண்டுவில் கோப்புகளை இணையத்தில் இருந்து எளிதாக தரவிறக்கம் செய்ய பயன்படுக் நிரல்தான் multiget. இது ubuntu software centreல் இருக்கிறது.

எனவே Applications->ubuntu software centre சென்று அதன் search boxல் multiget என்று தட்டச்சு செய்தால் நிரல் வந்துவிடும். பின்னர் நாம் நிறுவிக்கொள்ளலாம்.


நிரலை இயக்க applications->internet->multiget தேர்ந்தெடுக்க வேண்டும்.


இதில் add பொத்தானை அழுத்தி நமக்கு வேண்டிய தரவிறக்கம் செய்யவேண்டிய முகவரியை சேர்த்துக்கொள்ளலாம்.


இதில் ok அழுத்தினால் கோப்பு தரவிறக்க ஆரம்பிக்கும்.


இதில் option சென்று நமக்கு தேவையான அமைப்புகளை வைத்துக்கொள்ளலாம்.

Sunday, May 30, 2010

உபுண்டுவில் gpg key தானாக தரவிறக்கம் செய்ய

உபுண்டுவில் PPA மூலம் சில repository க்களை நாம் software sourceல் சேர்த்திருப்போம். ஆனால் update செய்யும் போது கீ இல்லை என்று பிழைசெய்தி காட்டும். இதை தவிர்க்க இப்போது deb வந்துள்ளது.

10.04 ன் கீக்கானது

launchpad-getkeys_0.1~lucid3_all.deb

9.10 ன் கீக்கானது

launchpad-getkeys_0.1~karmic_all.deb

மேற்கண்ட சுட்டியிலிருந்து தரவிறக்கம் செய்து நிறுவிக்கொண்டால் போதும்.


இந்த நிரலை செயல்படுத்த டெர்மினலில்

sudo launchpad-getkeys என்று தட்டச்சு செய்ய வேண்டும்.




இப்போது System->administration->software source->authentication சென்றால்


இதில் நாம் சேர்த்த repository க்களுக்கு தேவையான கீ இருப்பதை காணலாம்.

Thursday, May 27, 2010

உபுண்டுவில் k3b burning application

உபுண்டுவில் சிடி எழுதுவதற்கு நான் பயன்படுத்துவது brasero தான். ஆனால் 1004ல் சிடி காப்பி செய்கையில் சில கோப்புகளை காணவில்லை என்று விண்டோ வந்தது.


என்னவென்று பார்த்தால் toc2cue மற்றும் cdrdao என்று இரு கோப்புகளையும் நிருவ சொல்லியது. இதில் toc2cue என்ற கோப்பு மட்டும் உபுண்டுவில் இல்லை. இந்த கோப்பு லினக்ஸ் மின்டிலும் இல்லை. எனவே k3b நிறுவிப்பார்க்கலாம் என்று நிறுவினேன். இது ubuntu software centre ல் இருக்கிறது.


நிறுவியப்பின் Applications->Sound & video->k3b சென்றால் வந்துவிடும்.



இதன் தோற்றமே விலை கொடுத்து வாங்கும் மென்பொருளைப்போல் இருக்கிறது.ஆனால் இது open source software. இது இலவசமாக கிடைக்கிறது. மேலும் அதை விட சிறப்பாக இயங்குகிறது.

ஒரு சிடியில் இருப்பதை காப்பி செய்து அதை image கோப்பாக மாற்றி வேறோரு சிடியில் எழுதியது.




இந்த நிரல் விரைவாக காப்பி செய்து எழுதிவிட்டது.

Wednesday, May 26, 2010

உபுண்டுவில் UCC (ubuntu control centre)

உபுண்டுவில் ucc (ubuntu control centre) எனப்படுவது உபுண்டுவில் உள்ள control centreஐ போல் இல்லாமல் வேறு பல நிரல்களையும் கொண்டுள்ளது. அதாவது hardware info,font manager போன்று பல நிரல்களை உடையது.

இந்த நிரலை நிறுவ முதலில் font manager நிறுவிக்கொள்ளவேண்டும். பின்னர் ucc தரவிறக்கி நிறுவிக்கொள்ளவேண்டும்.

இந்த நிரலை இயக்குவதற்கு

Applications->Systems Tools->ucc செல்ல வேண்டும்.


Software management


Hardware


Networks and Internet



System


Local disks




Personal settings


Tuesday, May 25, 2010

உபுண்டுவில் desktop wallpaper slideshow

உபுண்டுவில் டெக்ஸ்டாபில் wallpaper slideshow வரவழைக்க முடியும். இதற்கு ஒரு சிறிய ஸ்கிரிப்டை தரவிறக்கி இயக்கினால் போதும்.

சுட்டி

தரவிறக்கினால் சுருக்கப்பட்ட கோப்பு கிடைக்கும். அதை விரித்து நம் மேசை மீது வைத்து கூட இயக்கலாம். கோப்பின் மீது இடது சொடுக்கினால்



run அழுத்தியவுடன்


ஸ்கிரிப்டை இயக்கியவுடன் மேலே கண்ட விண்டோ வரும். இதில் படங்கள் அடங்கிய அடைவை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் picture duration நேரத்தை நொடி,நிமிடம்,மணி போன்று நம் வசதிக்கு எற்றவாறு வைத்துக்கொள்ளலாம். ok அழுத்தினால் ஸ்கிரிப்ட் இயங்க தொடங்கும்.